ராவ் பகதூர்- விமர்சனம்

அரண்மனை செட் போட்ட படம் பார்த்து ரொம்பநாள் ஆச்சுல்ல? இதோ வந்திருக்கிறார் ராவ் பகதூர்

1968 கால கட்டத்து கதை. அரண்மனை வாரிசான ஹீரோ சத்யதேவ் பெரும் நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார். “உண்மை செத்துப் போச்சு உண்மை செத்துப்போச்சு” என புலம்பும் அவருக்கு மனைவியும் வாரிசும் உண்டு. மனைவியான தீபா தாமஸ் சத்யதேவோடு பேசாமல் இருப்பவர். மேலும் ஒரு கட்டத்தில் சத்யதேவிற்கு வியாதி முற்றிவிடுகிறது. அதைச் சரிசெய்ய அவரின் நண்பர் விகாஷ் முப்புலா வருகிறார். அவரிடம் சத்யதேவ் ஒரு ரகசியம் சொல்கிறார். அந்த ரகசியத்தின் பின்னணி தான் படத்தின் மீதிக்கதை

சத்யதேவ் இயல்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். தெலுங்கில் அவரை நம்மூர் விஜய்சேதுபதி என்பார்கள். தீபா தாமஸ் அருமையான நடிப்பால் நம்மை கவர்கிறார். விகாஷ் முப்புலா ஏற்றுக்கொண்ட கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார். பாலா பரசார், ஆனந்த் பாரதி, பரனாய் வாகா, மாஸ்டர் கிரண் உள்ளிட்ட பலரும் சிறந்த நடிப்பையே கொடுத்துள்ளனர்

ஸ்மாறன் நல்லிசையால் தானொரு நல்ல இசையமைப்பாளர் என்பதை நிறுவியுள்ளார். அந்தக் காலகட்டத்திற்கான ஓசையை இசையில் பயன்படுத்தியிருந்த விதம் சிறப்பாக இருந்தது. கார்த்திக் பார்மர் தனது தனித்துவமான ஒளிப்பதிவைத் தந்துள்ளார். படத்தின் விஷுவல் குவாலிட்டியில் சமரசமே செய்யாமல் உழைத்துள்ளார்

அரண்மனை செட் போன்ற பின்னணியில் ஒரு படம் பார்த்து ரொம்ப நாளாச்சு என்று ஏங்கும் மக்களுக்கு இந்தப்படம் நல்ல ஆப்சன். சிற்சில காட்சிகள் சோர்வைத் தந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஒரு நல்லபடம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது. இயக்குநர் வெங்கடேஷ் மஹாவிற்கு வாழ்த்துகள்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *