மலையாள சினிமாவின் தாய்ப்பாசம் தான் இந்த பாலன்
நாயகி பர்ஸானா பலத்திங்கல் தன் சிறுவயது மகனான ஆதிஷேஷனோடு சிறையில் இருந்து விடுதலையாகிறார். வெளிவந்து பின் தன் மகனோடு ஒவ்வொரு இடமாக தன் அடையாளங்களை மறைத்துக்கொண்டு வாழ்கிறார். துளிநேரம் தன் மகனை விட்டுப்பிரியாத அவர், ஒரு இக்கட்டான சூழலில் சிக்குகிறார். அச்சூழலின் தாக்கம் மகனை அவரிடமிருந்து பிரிக்கிறது. அதன்பின் ஆறேழு வருடங்கள் கழித்து மீண்டும் தாயும் மகனும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்ததா என்பது படத்தின் கதை
பர்ஸானா பலத்திங்கல் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். ஒரு ஒரிஜினல் தாய்ப்பாசத்தை திரையில் நம் கண்முன் நிறுத்தி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். சிறுவயது மகனாக நடித்துள்ள ஆதிஷேஷன் தரமாக நடித்துள்ளான். கெஸ்ட்ரோலில் வரும் டொவினோ தாமஸுடன் கூட தன் நடிப்பின் தனித்துவத்தை அவன் விட்டுக்கொடுக்கவில்லை. டொவினோ தாமஸ் சேட்டா நம் மனதை கொள்ளை கொள்கிறார். பருவ வயது மகனாக வரும் சினான் நடிப்பும் சிறப்பு. காவல்துறை அதிகாரியாக வரும் ஜீன்பால் லால் தரமான பங்களிப்பைக் கொடுத்துள்ளார்
ஷைஜு காலித் ஒளிப்பதிவில் நல்ல மேஜிக்கை நிகழ்த்தியுள்ளார். இரு காலகட்டத்திற்கான சிறு வித்தியாசத்தை ஒளிப்பதிவில் காட்டியுள்ளார். சுஷின் ஷியாமின் பின்னணி இசை படத்திற்கு பெரும்பலம். பாடல்களும் படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது
கதையை ஜித்துமாதவன் எழுதியுள்ளார். உண்மைச் சம்பவத்தைக் கொண்டு அழகாக எழுதியுள்ளார். மஞ்சும்மல் பாய்ஸ் புகழ் இயக்குநர் சிதம்பரம் தரமான மேக்கிங்-ஐ நிகழ்த்தி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். குறிப்பாக க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் வேறலெவல். தாய்ப்பாசத்தை வெல்லவைத்த விதம் அசத்தல்
பாலன்- நல்ல படம்
3.5/5
-வெண்பா தமிழ்

