பரிமளா & கோ- விமர்சனம்

பாபநாசம் படத்து கதையில் எக்ஸ்ட்ரா பாயாசம் வைத்து ஒன்றை முயற்சி செய்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்

இரண்டு மகள்கள் மற்றும் மனைவி ஊர்வசியுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஜெயராம். இரண்டு மகள்கள் மீதும் காதல் மற்றும் காமக்கண் வைக்கிறார் ஏரியா ரவுடியான சாண்டி. தனது இரு மகள்களுக்கும் கொடைச்சல் கொடுக்கும் சாண்டியை கொலை செய்துவிடலாமா என்ற திட்டத்தை ஜெயராம் குடும்பத்தினர் தீட்டுகின்றனர். மறுநாளே சாண்டி கொல்லப்படுகிறார். குடும்பத்தில் ஒருவர் தான் கொலை செய்ததாக குடும்பத்திற்குள்ளே விசாரணை நடைபெறுகிறது. அதன்பின் ஏரியா இன்ஸ்பெக்டர் மிஸ்கின் களம் இறங்குகிறார். அதன்பின் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் படத்தின் கதை

பாபநாசம் படம் தான் இன்ஸ்பிரேசன் என்பதை உணர்ந்துகொண்ட ஜெயராம் அதற்கேற்ற பாடிலாங்குவேஜை ஆங்காங்கே ஸ்பூப் செய்கிறார். அது ஒருசில இடங்களில் வொர்க்கவுட் ஆகிறது. ஊர்வசி செய்யும் ரணகள காமெடிகள் தியேட்டரில் சிரிப்பலையை வரவைக்கிறது. “ஒரு கொலை கேசுக்கு 300 ரூபா செலவு பண்ண மாட்டீங்களா” என அவர் கேட்பதெல்லாம் அல்லுசில்லு ரகம். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார் இருவரும் சில இடங்களில் அளவாகவும், சில இடங்களில் அதிகமாகவும் நடித்துள்ளனர். யோகிபாபு ஓரளவு ஒப்பேற்றியுள்ளார். மிஸ்கின் கேரக்டரில் நல்ல மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது..அந்த மீட்டரை கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார்

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் எதார்த்தம் மீறாத ஷாட்களால் கவனிக்க வைக்கிறார். சென்னை பட்டினப்பாக்கம் ஏரியாவை கச்சிதமாக காட்டியுள்ளார். இசையமைப்பாளர் பின்னணி இசையில் நல்ல கவனம் செலுத்தியிருக்கிறார்

இது பாபநாசம் படத்தின் இன்ஸ்பிரேசன் தான் என்பதை ரசிகனுக்குச் சொல்வது போல படத்தின் கேரக்டர்களையே பாபநாசம் படம் பார்க்க் வைத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். அந்த ஐடியா பக்காவாக வொர்க்காகியுள்ளது. பல இடங்களில் டைமிங் காமெடி படத்திற்கு எனர்ஜி கூட்டுகிறது. ஆனால் படத்தின் ஆதாரமான பேமிலி கனெக்டிங் நமக்கு மருந்துக்கும் ஏற்படவில்லை. ஒரு கொலைப்பலி விழுந்தால் ஒரு நடுத்தர குடும்பம் எப்படி பதறும்? அந்தப்பதட்டம் திரையில் யாரிடமும் வரவில்லை. அதனாலே மெயின் கேரக்டர்களோடு நாம் பயணிக்க முடியவில்லை. மிகவும் மேலோட்டமான மெத்தனமான திரைக்கதை நம்மை படத்திலிருந்து பின்வாங்க வைத்துவிடுகிறது

பரிமளா & கோ- ஒகோ இல்லை..ஒகே தான்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *