தேச நலன் கருதி தங்களை மறைத்துக்கொண்டு வாழும் உளவாளிகள் உலகத்தை காட்டியுள்ளது மிஸ்டர் எக்ஸ் படம்
பேரழிவை நிகழ்த்தும் ஒரு திட்டத்தோடு, ஒரு டிவேஸை நம் நாட்டுக்குள் கொண்டுவர திட்டமிடுகிறார் வில்லன் கெளதம் ராம் கார்த்திக். அவருக்கு மேல் ராணா என ஒரு பாஸ் உண்டு! இவர்களின் இந்தச் சதித்திட்டத்தை அறியும் ரா எஜெண்ட் மஞ்சுவாரியர் தனது டீமின் முக்கிய அங்கமான ஆர்யாவிடம், அந்த டிவேஸை இந்தியாவிற்குள் வரவிடாமல் தடுக்கும் பணியை ஒப்படைக்கிறார். ஆர்யா டீம் அதை எப்படிச் செய்து சாதிக்கிறது? அந்த ராணா யார்? என்பதை பரபர திரைக்கதையாக மாற்றி தெறிக்கவிட்டுள்ளார் இயக்குநர் மனு ஆனந்த்
படத்தில் சற்றுநேரம் வந்தாலும் கதையை முழுவதுமாக ஆக்ரமித்துள்ளார் சரத்குமார். ஒரு சீக்வென்ஸில் சூரியன் பட கெட்டப்பில் அவர் வரும்போது தியேட்டர் அல்லுசில்லு கிளப்புகிறது. ஆர்யா கம்பீரத்தோடு வலம் வருகிறார். அவர் ஆக்சன் மோட் ஷிப்-ஐ மாட்டிய ரோபோ போல சண்டைக்காட்சிகளில் அதகளம் செய்கிறார். ஸ்வீட் சர்ப்ரைஸாக வில்லன் வேடத்தில் அசாத்திய நடிப்பைக் கொடுத்துள்ளார் கெளதம் ராம் கார்த்திக். அவரது வாய்ஸ் கூட வில்லத்தனத்திற்கு உதவியுள்ளது. கிரேட்! மஞ்சு வாரியர் இந்தக் கேரக்டருக்கு சாலப்பொருத்தம். க்ளைமாக்ஸ் பைட்டில் தூள் பரத்தியுள்ளார். அதுல்யா ரவி, மனகா, ரைஸா வில்சன் ஆகிய அழகு பதுமைகள் படத்தை என்கேஜாக வைத்துள்ளனர். காளி வெங்கட் ஒரு காட்சியில் முத்திரைப்பதித்துள்ளார்
திபு நினன் தாமஸ் பின்னணி இசையில் அட்டகாசம் செய்திருக்கிறார். ஒரு பாடலும் தரமாக அமைந்துள்ளது. படத்தின் மற்றொரு கதாநாயகன் ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட்! கலரிங், ஷாட் கம்போஸிங் என அனைத்துமே உலகத்தரம். எடிட்டர் பிரசன்னா GK எல்லா சீக்வென்ஸ்களையும் தரமாக தொகுத்துள்ளார்
இப்படியான அதகளமான ஆக்சன் திரில்லர் படத்தில் ரா எஜெண்ட்களின் அக உலகத்தையும் காண்பித்து அசத்தியுள்ளார் இயக்குநர் மனு ஆனந்த். நிறைய காட்சிகளில் லாஜிக் கேள்விகள் கொடிகட்டிப் பறந்தாலும், பரபர திரைக்கதையால் கேள்விகளை வடிகட்டி அகற்றி விடுகிறார். படத்தில் எமோஷ்னல் கேமிங் இல்லாவிட்டாலும், பக்கா என்டெர்ய்டெயின்மெண்ட் கேமிங் இருக்கிறது. அதனால் படம் வொர்க்கவுட் ஆகியுள்ளது. So நம்பி போகலாம்! நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டருக்குச் சென்றால் டபுள் ட்ரீட் கன்பார்ம்
3.25/5
-வெண்பா தமிழ்

