தொடர் கொலைகளும் அவை சார்ந்த விசாரணைகளும் என திரில்லர் ரூட் பிடித்துள்ளது இப்படம்
50 வயதுள்ள ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். முக்கியமாக கொல்லப்படும் ஆண்களுக்கு பெண் பிள்ளைகள் இருக்கின்றன. கிரைம் நடக்கும் நிலம் உடுப்பி உள்ளிட்ட சில ஏரியாக்கள். இந்தக் கொலைகளை விசாரிக்க உடுப்பி ஆனேகோட்டா அருகே போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஹீரோ விஜய் ராகவேந்திரா. அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை சந்தேகப்படுகிறார். ஆனால் அந்த விசாரணையில் வேறு ட்விஸ்ட் நடந்தேறுகிறது. ஒரு கட்டத்தில் ஹீரோவின் உறவினரையே கொலையாளி நெருங்க,முடிவில் ஹீரோ கொலைகாரனை பிடித்தாரா என்பதே மீதிக்கதை
அலட்டல் உருட்டல் இல்லாத ஹீரோவாக வசீகரிக்கிறார் விஜய் ராகவேந்திரா..பெயரில் விஜய் இருந்தும் கூட மாஸ் இல்லை என்பது ஆச்சர்யம். அவரின் இயல்பான விசாரணைகளே படத்தின் மீது பாசிட்டிவிட்டியை கொடுத்து விடுகிறது. கோபால் கிருஷ்ண தேஷ்பாண்டே, உஷா பண்டாரி உள்ளிட்ட பலரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர்
கொலைகள் சார்ந்த கதை என்றாலும் கதைக்குள் இசை பெரிய ரோல்ப்ளே செய்கிறது. அதை உணர்ந்து இசையமைப்பாளர் நவ்நீத்ஷாம் அசத்தலான இசையை வழங்கியுள்ளார். கிட்டத்தட்ட ஒரு மலையாள பட விஷுவலை கண்முன் நிறுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஹேமந்த் ஆச்சார்யா. எடிட்டரும் சமர்த்தான வேலையைச் செய்துள்ளார்
இயக்குநர் தேவி பிரசாத் ஷெட்டி திரில்லர் ஜானரைப் பிடித்தாலும் படத்திற்குள் நல்ல கருத்துக்களையும், எமோஷ்னலையும் அமைந்துள்ளார். அது பெரும் ஆறுதல். மேலும் வழக்கமான படப்பாணிகளை நம்பாமல் புதுவிதமான அதே சமயம் இயல்பான இன்வெஸ்டிகேசன் காட்சிகளை வைத்து திரைக்கதை அமைத்துள்ளார். குட்டிக்குட்டி லாஜிக் இஸ்யூஸ் இருந்தாலும் படம் நின்று பேசுகிறது
3.5/5
-வெண்பா தமிழ்

