அறிவான்- விமர்சனம்

தொடர்கொலைகளும் அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையும் தான் அறிவான்

ஹீரோ ஆனந்த் நாக் ஒரு போலீஸ் அதிகாரி. என்கவுண்டர் ஸ்பெசலிஷ்ட் ஆன அவர் சஸ்பென்சனில் இருக்கிறார். ஒரு சுபயோக சுபதினத்தில் சஸ்பென்சன் நீங்கி அவர் பணிக்குத் திரும்புகிறார். அவர் மீண்டும் பொறுப்பேற்கும் ஊர் நெய்வேலி. அங்கு பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவர் மூலம் இரு கொலை நடக்கிறது. அந்தக் கொலைகளை விசாரிக்கிறார் ஆனந்த் நாக். விசாரணையில் வெளிப்படும் ட்விஸ்ட்கள் தான் படத்தின் மீதிக்கதை

கதையின் நாயகனாக ஆனந்த் நாக் நன்றாக நடித்துள்ளார். போலீஸ் யூனிபார்ம் அவருக்கு முதலில் சற்று அந்நியமாக தெரிந்தாலும் போகப்போக ஒகே ஆகிவிடுகிறது. பிக்பாஸ் ஜனனி மீடியா பெர்சனாக வருகிறார். வெகு இயல்பாக நடித்துள்ளார். ஏனைய கேரக்டர்கள் படத்தில் நிறையபேர் இருக்கின்றனர். யாரையும் பெரிதாக குறைகூற முடியாது

யஸ்வந்த் ஒளிப்பதிவில் இன்னும் தனித்திறமையை காட்டியிருக்கலாம். இருந்தாலும் பல ட்ரோன் ஷாட்களிலும், இன்டர்வெல் காட்சியிலும் அசத்தியுள்ளார்..இராவின் இசையில் ஒரு சோக பாடல் சிறப்பாக வந்துள்ளது. பின்னணி இசையும் குறையில்லை

நெய்வேலி பேக்ட்ராபில் ஒரு திரில்லர் கதையை குறைந்த பட்ஜெட்டில் எடுத்துள்ளார் இயக்குநர் அருண் பிரசாத். கதையின் பின்னணியில் நல்ல உழைப்பைப் போட்டுள்ளார். சிற்சில ட்விஸ்ட்களும் படத்தில் வொர்க் ஆகியுள்ளது. படத்தின் வேகமும் ஒகே தான். சில காட்சிகளில் தெரியும் செயற்கைத் தனம் சற்று அயர்ச்சியைத் தருகிறது. மேலும் ஸ்டேட்ஜிங் லெவலில் படம் இன்னும் கூட தரமாக வந்திருக்க வேண்டும். ஹீரோவின் ஸ்மார்ட் ஐடியாக்கள் படத்தில் எதும் தென்படாததும் சிறு குறையே

இப்படியான குட்டி நடிகர்களை வைத்து ஒரு பரபர திரைக்கதையை வடிவமைத்து ஓரளவு பேக்கேஜ் செய்துள்ள இயக்குநரின் திறமையைப் பாராட்டலாம். குட்டிக்குறைகளை கெட்டியான மனதோடு ஏற்றுக்கொண்டால் ஒன்டைம் வாட்சபிள் படம் தான் இது
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *