பருத்தி- விமர்சனம்

“சாதிகள் இல்லையடி பாப்பா- But இதைச் சொல்றோம் என்ற பெயரில் வைக்காதீர்கள் ஆப்பா?” இப்ப ஏன் இந்த டயலாக் பேசுறோம்னா.. சமுத்துவம் பேசுகிறோம் என்ற பெயரில் சில படங்கள் நம்மை வதை செய்கின்றன..அந்த வகையில் பருத்தியும் அந்த லிஸ்டில் வருகிறதா என்று பார்க்கலாம்

வட மாவட்டத்தில் சாதிவெறி புரையோடி போயிருக்கும் கிராமம் ஒன்று. அக்கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களை பாட்டி ஒருவர் தனியாக வளர்க்கிறார். சிறுவர்களில் இளைய பேரனான பள்ளி மாணவன் தன் சக வயது மாணிவியுடன் நட்போடும் காதலோடும் பழகி விளையாடி வருகிறான் . அந்தப் பெண் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவள். ஆனால் அவளது தாய் தந்தை சமுத்துவம் விரும்புகிறவர்கள். ஆனால் அந்த மாணவியின் பெரியப்பா சாதிவெறியின் உச்சத்தில் இருப்பவர். இச்சூழலில் ஊரில் இன்னொரு ஜோடியும் சாதி மீறி காதலிக்கிறார்கள். அவர்களுக்கும் ஒரு ஆபத்து இருக்கிறது. இதற்குமேல் படத்தில் சோனியா அகர்வாலும் இருக்கிறார். அவரது கேரக்டர் முன்பாதியில் சஸ்பென்ஸ்காக வைக்கப்படுகிறது. பின்பாதியில் ரிவில் ஆகும் அவரது கேரக்டர் என்ன? படம் பேச வந்ததைச் சரியாகப் பேசி முடித்ததா? என்ற கேள்விகளுக்கான விடையே பருத்தி

பருத்தியில் நடித்திருப்பவர்கள் சோனியா அகர்வாலைத் தவிர அனைவருமே புதிய நபர்கள். மென்மையான சோகத்தை சோனியா சிறப்பாக வெளிப்படுத்தி நடித்துள்ளார். மீதியுள்ள எல்லா நடிகர்களும் மிகையான நடிப்பை அள்ளித் தெளிக்கிறார்கள். இருந்தாலும் ஒருசிலர் ஸ்கோர் செய்துள்ளனர்

ரஞ்சித் வாசுதேவ் தனது இசையால் கூடுமான வரை படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். பாடல்களில் கிராமிய வாசனை தூக்கலாக அமைந்துள்ளது. ராஜேஷ்குமாரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகியலை கண்முன் நிறுத்தியுள்ளது. நிறைய நல்ல நல்ல ஷாட்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்

சாதி வெறியின் வீரியம் முந்தைய தலைமுறை பெண்களிடமும் இருந்ததை இயக்குநர் குரு சிறபபாக வெளிப்படுத்தியுள்ளார். குறைகள் நிறைந்த கதை சொல்லலும், மேக்கிங்கும் இருந்தாலும் படம் பேச வரும் நீதி, மிக முக்கியமானது. பருத்தி ஒரு முழுமையான கலை படைப்பாக உருப்பெறா விட்டாலும், ஒரு முக்கியமான கதைப்படமாக வந்துள்ளது
2.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *