Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை தென்னிந்தியாவின் சிறந்த மற்றும் வரலாற்று புகழ் பெற்ற இசை நிறுவனமான ‘லஹரி மியூசிக்’ அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது.
Behindwoods Founder & CEO மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கும் மூன்வாக், இசை, நடனம் மற்றும் குடும்ப பொழுதுபோக்கின் கொண்டாட்டமாக உருவாகி வருகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இதயத்தை வருடும் இசையுடன் வெளியாகும் இந்தப் படம், ரசிகர்கள் மற்றும் திரைத் துறையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மூன்வாக் படத்தில் பிரபுதேவா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அஷோகன், சதிஷ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொல்லு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு தரமான குடும்ப பொழுதுபோக்காக உருவாகும் மூன்வாக், உலக தர நடன அமைப்புகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை அழகாக இணைத்து, இந்திய அளவில் இசை, நடனம் மற்றும் காமெடியின் கொண்டாட்டமாக உருவாகி வருகிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ‘மூன்வாக்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு, 2026ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.
ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்திருக்கும் முதல் பாடல் வீடியோ தமிழ் ராப் இசைகலைஞர் அறிவு பாடிய ராப்புடன் வரும் நவம்பர் 19, புதன்கிழமை அன்று, லஹரி மியூசிக் மற்றும் Behindwoods டிவி யூடியூப் சேனல்களில் மட்டும் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத பழைய நினைவுகளைத் தூண்டும் உற்சாகத்தை வழங்கும்.

