டைட்டிலிலே கதையை வைத்துள்ள இயக்குநர் திரைக்கதையில் Fun வைத்துள்ளாரா?
முகேனுக்கு ஒரு காதல் தோல்வி. அவர் மனமுடைந்து திரிகிறார். அப்போது அவர் கண்ணுக்கு முன்பொரு காலத்தில் ஒரு ஜின்-ஐ அடைத்து வைக்கப்பட்ட பெட்டி கிடைக்கிறது. அதைத் தொட்டாலே முகேனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. ஆனால் அவரது வீட்டில் மற்றவர்களுக்கு அது துன்பத்தைத் தருகிறது. கடைசியில் முகேன் வாழ்வில் ஜின் ஏற்படுத்துவது என்ன? என்பதாக படத்தின் திரைக்கதை பயணிக்கிறது
முகேன் இயல்பாக நடிக்க முயன்றுள்ளார். இன்னும் தீவிரமாக முயற்சியுங்கள் சகோ! பவியா ட்ரிகா கொடுத்த வேலையைச் செய்துள்ளார். வடிவக்கரசி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் கவர்கிறார். பால சரவணன் படத்திற்குப் பெரிய ஆதரவாக இருக்கிறார். ராதாரவி, நிழல்கள் ரவி, வினோதினி, ரித்விக் ஆகியோர் படத்தில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டர்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்
அர்ஜுன் ராஜா தனது ஒளிப்பதிவைக் கூடுமான வரையில் சிறப்பாக கொடுக்க முயன்றுள்ளார். விவேக் மெர்வின் தனது பின்னணி இசையால் படத்தைத் தேத்துகிறார்.
படத்தின் கான்செப்ட்-ஐ அருமையாகப் பிடித்த இயக்குநர் T.R.பாலா திரைக்கதையை வலிமையோடு எழுதியிருக்கலாம். இம்மாதிரியான புதிய ஐடியாக்கள் உள்ள படத்திற்குத் திரைக்கதை தான் உயிர்நாடி. மேலும் காட்சிகளின் ஸ்டேஜிங்கிலும் மெனக்கெட்டிருக்கலாம். முகேனின் காதல் காட்சிகள் கூட பெரிதாக வொர்க் ஆகவில்லை. ஜின் என்ட்ரியாகும் போது படத்தில் இருக்கும் எனர்ஜி படமெங்கும் வியாபித்திருந்தால் இந்த ஜென் வின் அடித்திருக்கும்
2.5/5
-வெண்பா தமிழ்

