டீசல்- விமர்சனம்

1979-ஆம் ஆண்டு வடசென்னை மீனவர்களின் வாழ்வாதரத்தை தடுக்கும் திட்டம் ஒன்றை அரசு கொண்டு வருகிறது. அந்த திட்டம் என்னன்னா கடற்கரை ஓரமாக குருடாயில் பைப் வைக்கும் திட்டம். இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கடலுக்குள் செலுத்த முடியவில்லை. ஹ்ரிஷ் கல்யாணின் வளர்ப்பு அப்பா சாய்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் குருடாயில் வரும் பைப்-ல் ஓட்டை போட்டு ஆயில் திருட்டைச் செய்கின்றனர். அதன் மூலம் வரும் பணத்தை வடசென்னை மக்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்கள்.

அது அப்படியே 2014 வரை தொடர்கிறது. ஹரிஷ் கல்யாணும் அதே குருடாயில் கடத்தலை மிக சாமர்த்தியமாக செய்து வருகிறார். செழிப்போடு நடக்கும் இந்த இல்லீகல் தொழிலுக்கு DGP வினய் உதவியோடு விவேக் பிரசன்னா வருகிறார். அதன் பின் என்ன? வழக்கமான ஹீரோ வில்லன் கேம் தான் இந்த டீசல்

நாயகனாக ஹரிஷ் கல்யாண் கஷ்டப்பட்டு வடசென்னை இளைஞனாக உருமாறி யிருந்தாலும், ஒருமாதிரி தேறிவிடுகிறார். நெகட்டிவ் கேரக்டரில் ஆகத்தரமான நடிப்பை வழங்கியுள்ளார் வினய். சாய்குமார், கருணாஸ், அதுல்யா ரவி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட இதர கேரக்டர்கள் கூடுமான வரை சிதற விட்டுள்ளனர்

படத்தில் ரிச்சர்ட் எம் நாதனின் கேமரா வொர்க் தரமாக அமைந்துள்ளது. நிறைய பிரம்மாண்ட விஷுவல் நல்ல காட்சியனுபவத்தைக் கொடுக்கிறது. இசை அமைப்பாளர் திபு வினன் தாமஸ். பாடல்களில் ஆல்ரெடி ஹிட் கொடுத்திருந்தார். பின்னணி இசையிலும் நல்ல மைலேஜைக் கொடுத்துள்ளார். நிறைய புட்டேஜ் எடுக்கப்பட்டு அதன்பிறகு செதுக்கப்பட்ட படம் என்பது சிற்சில ஜம் கட்களில் தெரிகிறது

படத்தின் விறுவிறு திரைக்கதைக்கு அடித்தளமாக அமைந்திருப்பது ஆழமான கதை. ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் கதையாக படம் ஈர்க்கிறது. ஆனால் அதைச் சரியான முறையில் நமக்குள் கடத்த தவறியுள்ளார் இயக்குநர். சண்முகம்

படத்தின் எந்த கேரக்டரும் இயல்பாக நமக்குள் ஊடுருவவில்லை. அதனால் கேரக்டர்களின் எமோஷ்னல் நம்மோடு கனெக்ட் ஆகவில்லை

இருந்தாலும் பிரம்மாண்டமான மேக்கிங், லாஜிக் இல்லாவிட்டாலும் நிகழும் ஆழமான கிரவுண்ட் வொர்க் ஆகியவற்றால் டீசல் கொஞ்சமாக ஈர்க்கவே செய்கிறது
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *