ஒரு நடிகர் கேமராவிற்கு வெளியே இருக்கும் தன்மைகளை கேமராவிற்கு முன் கொண்டு வந்துவிட்டால், படத்தில் அவர் கேரக்டராக பரிணமிக்க முடியாது. நடிகர் அர்ஜுன் தாஸ் இதில் மிகவும் தனித்தன்மை வாய்ந்த நடிகர். Of the கேமராவில் தெரியும் அர்ஜுன் தாஸை அவர் நடிக்கும் படங்களில் பார்க்கவே முடியாது. அவர் ஏற்கும் கதாப்பாத்திரங்களாக மட்டுமே தெரிவார். கைதி ப்டத்தில் வில்லனாக நடித்தாலும், அநீதி படத்தில் ஹீரோவாக நடித்தாலும் தான் ஏற்கும் கதாப்பாத்திரமாகவே பரிணமிப்பார் அர்ஜுன் தாஸ். தமிழ் சினிமாவில் அவரது கரியரை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தும் விதமாக அமைந்துள்ளது தற்போது வெளியாகியிருக்கும் பாம் படம். இப்படத்தில் நாம் இதுவரை பார்க்காத அர்ஜுன் தாஸை பார்க்க முடியும். அச்சு அசலான ஒரு கிராமத்து இளைஞனை நம் கண்முன் நிறுத்தி அசத்தியுள்ளார் அர்ஜுன் தாஸ். படத்தின் முன்பாதி வரை அமைதியாகவும் எமோஷ்னலாகவும் உலாவும் அவர், இடைவேளைக்குப் பிறகு வேறோர் ஆளாக மாறி பட்டையக் கிளப்பியுள்ளார்.
வித்தியாசமான நடிப்பாலும் தனித்துவமிக்க குரலாலும் ரசிகர்களை ஈர்த்து வரும், அர்ஜுன் தாஸுக்கு பாம் ஒரு கரியர் பெஸ்ட் படம் எனலாம்

