குற்றம் புதிது- விமர்சனம்

கொலையும் அதன் தொடர்ச்சியான விசாரணையும் என பயணிக்கும் குற்றம் புதிது படத்தில் எதெல்லாம் புதிதாக இருக்கிறது?

மதசூதனராவின் மகள் காணாமல் போகிறார். பின் இறந்தும் போகிறார். ஹீரோ தருண் விஜய் ஒரு Food டெலிவரி பாய். ஆனால் அவருக்கும் ஹீரோயின் கொலைக்கும் சம்பந்தமில்லை என நம்ப வைக்கப்படுகிறது. ஆனால் பின் ஹீரோவே நான் தான் கொலை செய்தேன் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். மேலும் சில கொலைகளையும் அவர் லிஸ்டில் சேர்க்கிறார். ஒரு கட்டத்தில் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் ஹீரோயின் உயிரோடு மீட்கப்படுகிறார். அட இங்க என்னப்பா நடக்குது? என கேள்வி எழுகிறது அல்லவா? யெஸ் அக்கேள்விக்கான விடையே படம்

தருண் விஜய் இயல்பாக நடித்துள்ளார். எமோஷ்னல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். சேஷ்விதா கனிமொழி தனக்கு வழங்கப்பட்ட கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார். மதுசூதனராவ் ஒரு தந்தையாகவும் அதிகாரியாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பிரியதர்ஷினி ராஜ்குமார், ராம்ஸ் உள்பட ஏனைய கேரக்டர்களும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர்

ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ் நல்ல விஷுவல்ஸை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் கரண் பி கிருபா ஓரளவு திருப்தியான உழைப்பைக் கொடுத்துள்ளார். வெல்டன்

இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் கதையில் சில புதுமையானவற்றை செய்துள்ளார். கடைசி அரை மணிநேர படத்தில் வேறோர் கோணத்தில் திரைக்கதை அமைத்திருப்பதில் இயக்குநர் கவனிக்க வைக்கிறார். ஆனால் எண்ணற்ற லாஜிக் கேள்விகள் நம்மைத் துளைத்தெடுக்கின்றன. அதுவே நம்மைப் படத்திலிருந்து விலக வைக்கிறது. இருந்தாலும் சில புதிய முயற்சிகளுக்காக இந்த குற்றம் புதிது படத்தைப் பார்க்கலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *