கிங்டம்- விமர்சனம்

அண்ணன் தம்பி செண்டிமெண்ட் மற்றும் ஒரு அண்டர் கவர் ஆபரேசன் ஆகியவையே கிங்டம்

கான்ஸ்டபிளாக இருக்கும் விஜய் தேவரகொண்டா நியாயத்தின் பக்கம் நிற்கும் குணம் கொண்டவர். அம்மா ரோகினிக்கு மட்டுமே பயப்படும் அவர் சின்ன வயதில் தொலைந்து போன தன் அண்ணனை தேடும் பயணத்தில் இறங்குகிறார். இலங்கையில் ஒரு சிறிய தீவில் ஒரு இனக்குழுவாக வாழும் மக்களோடு இருக்கும் அண்ணனை அவர் தன்னோடு அழைத்து வந்தாரா என்பது ஒரு கதை. மேலும் உயரதிகாரி ஒருவரால் அண்டர்கவர் ஆபரேசன் ஒன்றையும் செய்கிறார் ஹீரோ. இரு செயல்களில் ஹீரோ எப்படி வென்றார் என்பதே கதை

சாக்லேட் பாயாக பார்க்கப்பட்ட விஜய் தேவரகொண்டா முழுக்க முழுக்க வேறு ஆளாக மாறி நிற்கிறார். ஆக்சன் எமோஷன் என எல்லா ஏரியாவிலும் விஜய் தேவரகொண்டா மாஸ். சத்யதேவ் மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பாக்யஸ்ரீ போர்ஸுக்கு பெரிதாக படத்தில் வேலையில்லை. மேலும் படத்தில் வரும் வில்லன் குருப் அனைவருமே தரமான தேர்வு

படத்தில் ஒன்மேன் ஆர்மியாக அசத்துவது அனிருத்தின் இசை. பின்னணி இசையில் தனி சாம்ராஜியத்தையே நடத்தியுள்ளார். கிரிஷ் கங்காதரன் ஜோமன்.டி.ஜான் இருவரும் ஒளிப்பதிவில் விஷுவல் விருந்து வைத்துள்ளனர். ஒரு போட் ஷேசிங் அசத்தலான ஆக்கம்

அண்ணனை தம்பி தேடிச்செல்லும் எமோஷ்னல் பயணம் மட்டுமே படம் என்றால் ஓரளவு நமக்குள் படம் கனெக்ட் ஆகியிருக்கும். அண்டர் கவர் ஆபரேசன் இலங்கை ஸ்மக்லிங் கடத்தல் அது இதுவென படம் எங்கங்கோ பயணித்து சோர்வடையச் செய்கிறது. இருந்தும் படத்தில் ஆங்காங்கே சில ஆச்சர்யங்களும், பிரம்மாண்டமும் நம்மை என்கரேஜ் செய்வதும் மறுப்பதற்கில்லை.
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *