99/66 – விமர்சனம்

ஒரு அப்பார்ட்மெண்ட் நம்பர்ஸை டைட்டிலாக வைத்தாலே அது பேய்படம் என உணர்க!

மனைவியை கணவன் கொல்லத்துடிப்பதும் மனைவி தப்புவதுமான ஒரு பரபர திரில்லர் பேய் இது. யெஸ்! மனைவி ரக்சிதா மகாலெட்சுமியை கொல்ல முனைகிறார் கணவனான சபரி. அவர் ஏன் அப்படிச் செய்கிறார் என்பதில் ஒரு ட்விஸ்ட். அதோடு அதே அப்பார்ட்மெண்டில் ரக்சிதா கண்களுக்கு மட்டும் தெரிபவராக வருகிறார் இன்னொரு நாயகியான ஸ்வேதா. அதற்கும் படத்தில் ரீசன் உண்டு. முடிவில் எல்லா கேள்விகளுக்கும் ப்ராப்பர் என்ட் தரமுயன்றுள்ளார் இயக்குநர் எம்.எஸ் மூர்த்தி

கதையின் நாயகியாக ரக்சிதா மகாலெட்சுமி ஓவர்டோஸ் இல்லாமல் நடித்திருப்பதே ஆறுதல். நாயகன் சபரி கொடுத்த வேலையை கெடுதலின்றி செய்துள்ளார். ஸ்வேதா, ரோகிந்த் கரண் இருவரும் தேவையான மீட்டரில் நடித்து கவனம் ஈர்க்கின்றனர். பவன் கிருஷ்ணா, கே.ஆர் விஜயா, கே.எஸ் வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, பி.எல்.தேனப்பன், சிங்கம்புலி, புஜ்ஜிபாபு, ஜாவா சுந்தரேசன், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம் என பலரும் ஓரளவு படத்தை தேத்த முயற்சித்துள்ளனர்

சேவிலோ ராஜா உருப்படியான ஒளிப்பதிவால் ஒகே மார்க் வாங்குகிறார். படத்தை இயக்குநரே இசையால் நிரப்பியுள்ளார். முயற்சிக்கு நல் வாழ்த்துகள்

கதைக்களம் ஏற்கெனவே பழக்கப்பட்டது என்றாலும், திரைக்கதையில் சில புதுமைகளைச் செய்துள்ளார் இயக்குநர். இன்னும் நிறைய இன்ட்ரெஸ்டிங் ஐடியாக்களைச் செய்திருக்கவேண்டும். பயத்தை வேறுவேறு கோணத்தில் காட்ட முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது என்றாலும் படம் இன்னுமே வீரியமாக வந்திருக்கலாம். But முதலுக்கு மோசமில்லை
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *