மலையாளத்திலிருந்து மீண்டும் ஒரு நல்ல சினிமா😍
கேரளாவில் ஆத்தங்கரையோரம் உள்ள சிறு கிராமத்தில் ஏழு சிறுவர்கள் புட்பால் மீது பெரும் விருப்போடு திரிகிறார்கள். அச்சிறுவர்களில் உமர் என்ற சிறுவன் அபாரமான மெஸ்ஸியின் ரசிகன். உமர் உள்பட அச்சிறுவர்களால் நேர்த்தியான கோச்சரிடம் சென்று கால்பந்து கற்றுக்கொள்ள முடியாத சூழல். ஆனாலும் அவர்களுக்கு லோக்கல் மேட்சில் ஜெயித்து நேஷ்னல் வரை செல்லவேண்டும் என்ற ஆசையுள்ளது. அவர்களின் ஆசையை ஹீரோ ஆண்டனி வர்க்கீஸ் நிறைவேற்றத் துடிக்கிறார். மேலும் ஆண்டனி வர்க்கீஸுக்கும் ஒரு லெளகீக ஆசை இருக்கிறது. அதுவும் நிறைவேறியதா? என்பதே படத்தின் கதை
இஸ்மாயில் என்ற கேரக்டரில் வரும் ஆண்டனி வர்க்கீஸ் மிகவும் பாசிட்டிவான கேரக்டரில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். நம்மை அதிகமாக ஈர்க்கும் நடிகராக இருக்கிறான் உமர் கேரக்டரில் நடித்துள்ள சிறுவன் தனிஷ் பி.கே. அலட்டிக் கொள்ளாமல் அவன் காட்டும் எல்லா ரியாக்சன்ஸும் செம்ம. குஞ்சு கேரக்டரில் வரும் அமல் என்ற பொடியனும் அதகளம். ஐ.எம். விஜயன் உள்ளிட்ட எல்லா சப்போர்ட்டிங் நடிகர்களும் நம் மனதில் நிறைகிறார்கள்
ஜேக்ஸ் பிஜோயின் இசையில் பாடல்கள் பின்னணி ஸ்கோர் இரண்டுமே அசத்தல். பைஸ் சித்திக் தனது ஒளிப்பதிவை திறம்பட செய்துள்ளார்
துல்லியமான ரைட்டிங் தான் இந்தப்படத்தின் மேன் ஆப் தி மேட்ச்! இயக்குநர் நிகில் பிரேம்ராஜ் புட்பால் விளையாட்டு காட்சிகளில் ஆகச்சிறந்த மேக்கிங்- ஐ கொடுத்துள்ளார். முதலில் ஸ்லோவாக துவங்கும் கதை சிற்சில இடங்களில் திவங்கினாலும் பின்பாதியில் சரியாக டிராவல் செய்கிறது. படத்தில் ஒரு லவ் போர்சன் குட்டியாக வருகிறது. அநேகமாக அதை கமர்சியலுக்காக வைத்திருக்கலாம். But அது கமர்சியலாக இல்லை. வாழ்வில் வெற்றியோ தோல்வியோ எது வந்தாலும் கனவு காண்பதையும் அதைநோக்கி பயணிப்பதையும் மட்டும் விடவேகூடாது என்று சொல்லியிருக்கும் பாசிட்டிவ் மெசேஜுக்காக மட்டுமே இப்படத்தை பலமுறை பார்க்கலாம்
3.5/5
-வெண்பா தமிழ்

