96, மெய்யழகன் ஆகிய படங்களின் இயக்குநர்
பிரேம் குமார் . தற்போது ஃபஹத் ஃபாசிலை வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார். அப்படத்திற்கு அசரீரி’ என வைத்துள்ளனர்
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படம் ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள் மற்றும் இயல்பான நடிப்பால் இந்திய அளவில் கவனம் பெற்றுவரும் ஃபஹத் ஃபாசில், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக ஷிவதா நடிக்கிறார். மேலும், சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

