லோ பட்ஜெட்டில் ஒரு நல்ல முயற்சி
ஒரு எழுத்தாளர் தான் கதைகளில் எழுதிய கேரக்டர்களை நேரில் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதே படத்தின் கதை. மேலும் அந்தக் கேரக்டர்கள் அந்த எழுத்தாளரிடம் கதையில் தான் சந்தித்த பிரச்சனைகள் பற்றிப் பேசினால் எப்படி இருக்கும்? இப்படியொரு ஆர்வத்தூண்டல் கதையை திரைக்கதையாக்கி கொடுத்துள்ளார் இயக்குநர் R.ராகவேந்திரா
படத்தின் முதல் வெற்றி நடிகர்களின் தேர்வில் அமைந்திருக்கிறது. மறைந்த டெல்லிகணேஷ் அசத்தியுள்ளார். மிஸ் யூ அய்யா. ராதிகா சாய் தீனா உள்பட பிற நடிகர்கள் அனைவருமே சிறப்பு. குறிப்பாக மெயின் கேரக்டர்களில் வருபவர்கள் ஒவ்வொரு நபரும் திறம்பட நடித்துள்ளனர்
சிறிய படத்தில் எப்படியெப்படி அட்ஜெஸ்ட் செய்து ஆங்கிள் வைக்கணுமோ அப்படி ஷாட்ஸ் வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர். இசை அமைப்பாளரும் தன் பங்கைச் சரிவர செய்துள்ளார்
செயற்கைத் தனமான விசயங்கள் படத்தைச் சற்று அந்நியப்படுத்தினாலும் நிச்சயமாக இந்தப் படம் சுமார் கேட்டகிரிக்கும் மேல் என்பது உறுதி. வளரும் கலைஞர்களின் திறமையை ஊக்குவிக்க படத்தைத் தியேட்டரில் காணுங்கள்
3.25/5

