“ஏய் அதோபாரு பேய்” என எந்தப் பூமர்த்தனமுமில்லாமல் ஒரு ஹாரர் வகைப் படத்தைத் தந்துள்ளார் இயக்குநர் ராகவ் மிர்தாத்
நாயகன் டிராவிட் செல்வம், நாயகி அஞ்சலி நாயர், அவர்களின் நண்பர் ஒருவர். இவர்கள் மூவரையும் காலேஜில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால். ஒரு ப்ளாக் ஹோல் ஹவுஸுக்குள் செல்கிறார்கள். அங்கு வைக்கப்பட்டுள்ள ஒரு டிரோன் மூலமாக நாயகி சித்தி இத்னானியை பார்க்கிறார் டிராவிட். கண்டதும் காதல்! ஆனால் சித்தி இத்னானி பின்கதை முன்கதை பயங்கர டெரராக இருக்கிறது. மேலும் ப்ளாக் ஹோல் ஹவுஸை கன்ட்ரோலில் வைத்துள்ள குரேஷி இவர்கள் மூவரையும் என்ன செய்தார் ஆகிய கேள்வியை முன் வைத்தும் திரைக்கதை நகர்கிறது
கதையின் நாயகனாக அறிமுகமாகியுள்ள டிராவிட் செல்வத்திற்கு முதலில் வாழ்த்துகள். டூட் படத்திலே நல்ல குணச்சித்திர நடிகராக வெளிப்பட்ட அவர் இந்தப்படத்திலும் நல்ல நடிப்பை தக்க வைத்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் முழு ஹீரோ மெட்டிரியலாக மாறுவார்;தேறுவார்! சித்தி இத்னானி கன்னக்குழி சிரிப்பில் டிராவிட்-ஐ மட்டுமல்ல நம்மையும் விழ வைக்கிறார். அஞ்சலி நாயரின் கேரக்டருக்கு மெனக்கெட்ட அளவிற்கு அவரது மேக்கப்பிற்கும் மெனக்கெட்டிருக்கலாம். துருத்தி தெரிகிறது டல் மேக்கப்! குரேஷி செய்யும் சில சேஷ்டைகள் வொர்க்காகியுள்ளது. தேவதர்ஷனி டெரர் காட்டி அசத்தியுள்ளார். சினிமாவாலா சதிஷ் நல்ல தேர்வு
இசையமைப்பாளர் ஹரி எஸ்.ஆர் ஜாலியான பின்னணி இசை, ஹாரர் கலந்த பின்னணி இசை என இரண்டு தளங்களிலும் சரியாக பயணித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் குறுகிய லொக்கேசனில் நடக்கும் படத்தை கூடுமான வரை விதவிதமான ஷாட்களால் வெரைட்டி காட்டி
இன்ட்ரெஸ்டாக்கியுள்ளார். சிறப்பு!
“அழகு என்பது நிறத்திலும் முகத்திலும் இல்லை அது அகத்தில் இருக்கிறது” என்ற ஒற்றைக்கருத்தை மிக அழகாக சொல்ல முயன்றுள்ளார் இயக்குநர். அதற்கான நேரத்தை மற்ற காட்சிகள் எடுத்துக்கொண்டது சின்ன குறைபாடு தான். அந்தக் குறைபாட்டை ஓரளவு காமெடி காட்சிகள் நேர் செய்கின்றன. கடைசி 20 நிமிட சர்வைவல் ட்ராவலும், 10 நிமிட எமோஷ்னல் டிராமாவும் பக்காவாக எடுபட்டுள்ளது. அந்த ஏரியாவிற்காகவே இந்த டிரோன்ஸை நாம் ஆதரிக்கலாம்
எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னது தான்.
“மனிதர்களை குறைகள் இருப்பினும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்”
3.25/5
-வெண்பா தமிழ்

