‘சுருங்கச் சொல்லல்..விளங்க வைத்தல்’ என்பதே தமிழின் இலக்கணம். அதன் அடிப்படையில் சொல்ல வந்த கருத்தை கமர்சியல் கலந்து கச்சிதமாக கொடுத்திருக்கிறார்கள் E 1 படத்தின் படைப்பாளர்களான சதா நாடார் மற்றும் மோனிகா செலினா
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு..அங்கு ஒரு பெண்ணும் குழந்தையும் இருக்கும் வீட்டிற்குள் ஒரு மர்மநபர் நுழைகிறான்..கூடவே ஒரு பிணம் வேறு! பரபரப்புக்குச் சொல்லவா வேண்டும்? அடுத்து என்ன என்பதை நோக்கி திரைக்கதை விரிகிறது
கதையின் நாயகன் சதா நாடார் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் பாசிட்டிவிட்டியைத் தருகிறது. நாயகி மோனிகா செலினா நடிப்பிலும் நல்ல மெச்சூட்! பாண்டி, பேபிஷிவ், ஆகியோரின் நடிப்பிலும் இயல்புத்தன்மை தெரிகிறது. நடிகர்களின் நல்ல நடிப்பு ஸ்கிரீனில் வெளிப்பட்டால் அதன்பின்னால் இயக்குநர்களின் பங்களிப்பு இருக்கும் என்பது நியதி
இ.ஜே.ஜான்சனின் இசை ஒரு நல்ல திரில்லர் உணர்வைத் தருகிறது. இப்படியான படங்களுக்கு இசை தானே ஆன்மா. எம்.எஸ். மனோகுமாரின் ஒளிப்பதிவை தனிப்பதிவு எனலாம். ட்ரோன் ஷாட் முதல் அனைத்து ஷாட்ஸையும் சிறப்பாக கம்போஸ் செய்துள்ளார்
சொல்ல வந்ததை ரத்தினச் சுருக்கமாக நறுக்கென சொல்லியிருக்கிறார்கள் இயக்குநர்கள் சதா நாடார் மற்றும் மோனிகா செலினா. குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறலை எதிர்க்கும் படங்களை வரவேற்பது தமிழ் சமூகத்தின் கடமை.
வரவேற்போம்!
3/5
-வெண்பா தமிழ்

