கேம்ப்லிங் சம்பந்தப்பட்ட கதையை வைத்து ஒரு மங்காத்தா ஆடியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய்
தன் அம்மாவின் சொத்தான நூலகத்தை வைத்திருக்கும் நாயகன் சந்தீப் கிஷன் அதை மெயிண்டெயின் செய்ய கஷ்டப்படுகிறார். சூதாட்டத்தில் திறமையாளரான அவர், சூதாட்டங்களில் நடக்கும் சூழ்ச்சியைக் கண்டுபிடிக்கிறார். அதை நடத்தும் வில்லன் ஆல்ரெடி இன்னொரு கிரைமும் செய்திருக்க, ஹீரோ வில்லன் மோதல் தொடர்கிறது. முடிவை நோக்கி படம் விரைகிறது
சந்தீப் கிஷன் ஆக்சன் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். அம்மா எமோஷ்னலை இன்னும் கூர்மைப் படுத்தியிருக்கலாம். பாரியா அப்துல்லா நல்ல அழகி. நடிப்பில் அவருக்குப் பெரிய வெளி கதையில் இல்லை. ராஜு சுந்தரம் அவ்வப்போது ஆறுதல் அளிக்கிறார். அன்புதாசன் கேரக்டர் நன்றாக வொர்க்காகியுள்ளது. சம்பத் வழக்கமான வில்லத்தனத்தைக் காட்டியுள்ளார்.ஏனைய கேரக்டர்களில் வரும் ஷிவ் பண்டிட், உள்ளிட்ட யாவரும் ஒகே மார்க் வாங்குகிறார்கள்
தமனின் பின்னணி இசையில் பெரிய ஏமாற்றம். பாடல்கள் பின்னணி இசை இரண்டிலும் இன்னும் எலிவேசன் இருந்திருக்கலாம். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு தரமாக அமைந்துள்ளது. ஷாட் கம்போசிங்கும் அருமை
படத்தின் மேக்கிங்கில் முதல்பட இயக்குநர் என்ற அறிகுறி எங்குமே தென்படவில்லை. அவ்வளவு அழகாக மேக் செய்துள்ளார். திரைக்கதையில் எமோஷ்னல் கனெக்டிங் கூடி வரவில்லை. குறிப்பாக மெயின் கதாப்பாத்திரங்கள் மீது நமக்கு எந்தப் பிணைப்பும் ஏற்படவில்லை. போதை சார்ந்த விசயங்களை ஊக்குவிக்கும் காமெடி காட்சிகளை எரேஸ் பண்ணியிருக்கலாம். சிலபல குறைகள் இருந்தாலும் படம் மின்னல் வேகத்தில் பறக்கிறது. கடைசியில் நடக்கும் மங்காத்தா க்ளைமாக்ஸும் சூப்பர்
3/5
-வெண்பா தமிழ்

