பத்தா- விமர்சனம்

வன்முறையை விட்டொழிக்கச் சொல்லும் ஒரு விண்டேஜ் சினிமா

ஆகப்பெரும் ரவுடி விஜய்சேதுபதி. பிறருக்குப் பயம் காட்ட தனது வன்முறையைக் காட்டத் தயங்காதவர். அவர் சிறுவன் சாயிடம் ஒரு விசயத்தில் மாட்டிக்கொள்கிறார்?! என்னாதிது? அது எப்படி? என்று கேள்வி எழுகிறதல்லவா? அதற்கான பதிலை ஒரு பள்ளிக்கூட பாத்ரூமில் வைத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்

ரவுடின்னா இனி பத்தா தான் எனச் சொல்லும்படி மாஸ் காட்டியிருக்கிறார் விஜே. கழிவறைக்குள் மாட்டிக்கொண்டு அவர் மிஞ்சுவதும் கெஞ்சுவதும் மாஸ் ரகம்! அடுத்தபடியாக படத்தில் ஸ்கோர் செய்கிறான் சிறுவன் சாய். நிச்சயமாக இந்த ஆண்டு நிறைய விருதுகள் சாய்க்கு காத்திருக்கிறது. லிஜோமோல் ஜோஸ் தரமான நடிப்பை வழங்கியுள்ளார். அஜய் கோஷ், அர்ஜுன் சிதம்பரம், சாந்தி பாலச்சந்திரன் என யாவரும் நல்ல நடிப்பைப் கொடுத்துள்ளனர்

இசையமைப்பாளர் சாய் அபயங்கரிடம் இப்படியொரு மெல்லிசையா? அசத்தியிருக்கிறார்.செல்வகுமார் எஸ்.கே தரமான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். ஆடை வடிவமைப்பு, ஆர்ட் வொர்க் அனைத்துமே தரமோ தரம்!

மிக மெல்லிய ஒன்லைனை வைத்து அதி அற்புதமாக திரைக்கதையைக் கோர்த்திருக்கிறார் இயக்குநர் பாலாஜிதரணி தரன். ஒரு நல்ல இயக்குநரை தமிழ் சினிமா மீண்டும் அடையாளம் கண்டு மகிழ்கிறது. எந்தக் குறையிமில்லாத வகையில் படம் மிரட்டுகிறது. பத்தாதுடா என சொல்ல பத்தாவிடம் ஏதுமில்லை
4/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *