கிட்டி- விமர்சனம்

குட்டி பட்ஜெட்டில் ஒரு இன்வெஸ்டிகேசன் திரில்லர்-ஐ கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் நெடுமாறன் மோகன் தாஸ்

படத்தின் ஆரம்பத்திலே இரு கொலை! அதைச் செய்தது யார் என்ற இன்வென்ஸ்டிகேசன் நடக்கிறது. திடீரென ஹீரோ அசோக், “நான் தான் இரண்டு கொலையைச் செய்தேன்” என்று போலீஸில் சரண்டராகிறார். உண்மையில் அசோக் தான் கொலையாளியா? ..அதற்கான காரணம் என்ன? என்பதாக படத்தின் திரைக்கதை விரிகிறது

காதல், கோபம், விரக்தி என பல பரிணாமங்களை தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நாயகன் அசோக். போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள திருமாறன் மோகன்தாஸ் வெகு இயல்பாக நடித்துள்ளார். ஒரு நிஜமான போலீஸை கண்முன் நிறுத்தும் அவரின் எதார்த்த தோற்றமும் நடிப்பும் கவனிக்க வைக்கிறது வாழ்த்துகள்! அர்ஜுனா துரைசாமி, நிஷா இஸ்மாத், சங்கவி தர்மராஜ், YG.மகேந்திரன், அரவிந்த்ராஜ், கடலூர் சிவா உள்ளிட்ட ஏனைய கேரக்டர்கள் எல்லோரும் நன்றாகவே நடித்துள்ளனர்

ஷேக் காதரின் இசை ஒரு திரில்லர் மூட்-ஐ கொடுக்கிறது. பாடல்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். வெங்கடாச்சலம் சிங்காரவேலனின் ஒளிப்பதிவு ஓரளவு நேர்த்தியாக வாய்த்திருக்கிறது. DI கலரிங்கில் இன்னும் கவனம் எடுத்திருக்கலாம்

What next? என்ற கேள்வியை படம் நெடுக கேட்க வைத்துள்ளார் இயக்குநர் நெடுமாறன் மோகன் தாஸ். காட்சிப்படுத்தலில் சில போதாமைகள் தெரிவது மைனஸ்! ஏற்கெனவே நாம் கேள்விப்பட்ட பார்த்த கதை தான் என்றாலும் நம் ஆர்வத்தை குறைக்காத திரைக்கதையைப் பாராட்டலாம்! எப்படி நடந்தது என்ற விசாரணையில் துவங்கி, இப்படியெல்லாம் நடக்குமா என்ற லாஜிக் கேள்விகளில் பயணித்து, ஓ.. அப்படியா நடந்தது என்ற வியப்பில் படம் நிறைவெய்துகிறது. நிச்சயமாக இன்னும் நன்றாக வந்திருக்க வேண்டிய படம். But வந்த வரைக்கும் ஒகே தான்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *