I Am Game- விமர்சனம்

சூதாட்டம் என்பது பெரும் வரலாற்றைக் கொண்டது. மகாபாரதம் காலம் தொட்டு சூதாட்டம் நிகழ்த்திய சோகங்களும் துன்பங்களும் நிறைய! இன்றைய நவீனகாலத்திலும் சூதாட்டம் பெரும் இழப்புகளை கொண்டு வருகிறது. அதை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை அணுகியிருக்கிறார்கள்

பெரும் சூதாட்ட வெறியரான துல்கர் சல்மான், நிறைய கடன் வாங்கி அந்தக் கடன்காரர்களிடமிருந்து தப்பிக்கும் போது ஒரு விபத்தில் தன் வலது கையை இழந்து விடுகிறார். ஆல்ட்டர்நேட்டாக இன்னொரு கை அவருக்குப் பொருத்தப்படுகிறது. பொருத்தப்பட்ட அந்தக் கை கிரிக்கெட் வீரரான ஆண்டனி வர்கீஸினுடையது. அந்தக் கையைப் பெற்ற துல்கர் சல்மானுக்கு பல அமானுஷ்யங்கள் நடக்கிறது. அதற்குப் பின்னால் பெரும் கதை இருக்கிறது. அந்தக் கதையில் ஒரு கேம்லிங் வெறியர் இருக்கிறார். அவரை கண்டடையும் துல்கர் அவரை எப்படி களையெடுத்தார் என்பது படத்தின் கதை

நடிகராக காட்சிக்குக் காட்சி நம்மை வியக்க வைக்கிறார் துல்கர் சல்மான். அவரது பணக்கார மேனரிசம் ரசிக்க வைக்கிறது. ஆக்சனிலும் தூள் பரத்துகிறார். கயாடுலோஹர் தரமான நடிப்போடும் பலமான அழகோடும் காட்சியளித்து கண்களை இன்பப்படுத்துகிறார். மிஷ்கின் வில்லன் ரோலில் மிரட்டியுள்ளார். ஆண்டனி வர்கீஸ் கொடுக்கப்பட்ட கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். சம்யுக்தா விஸ்வநாதன் பின்பாதியில் ஸ்கோர் செய்கிறார். வினய் ஃபோர்ட், ஒகே ரகம்! கதிருக்கு இன்னும் நல்ல ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம். பச்!

கேமராமேன் ஜிம்ஷி காலித் பிரம்மாண்டங்களை எல்லா ஷாட்களிலும் காட்டியுள்ளார். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் நிறைய கேரக்டர்களுக்கு தனித்தனி பி.ஜி.எம் கொடுத்து அசத்தியுள்ளார். பாடல்களையும் ரசிக்க முடிகிறது

முதல்பாதியில் சொன்ன கதையைத்தான் இரண்டாம் பாதியிலும் சொல்கிறார்கள் என்பது டிஸப்பாய்ன்மெண்ட்! ஆனாலும் காட்சிகளிலுள்ள உழைப்பு நம்மை கட்டிப்போடுகிறது. ‘கிரிக்கெட் என்பது எண்டர்டெய்ன்மெண்ட் அல்ல..எமோஷ்னல்’ என்று சொல்லி, அதில் ஸ்கோர் செய்து விட்டார் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத். படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, பிலால் மொய்து, இஸ்மாயில் அபூபக்கர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இந்த எழுத்துக்கூட்டணி இன்னும் எக்ஸ்ட்ரா உழைப்பைக் கொடுத்திருக்கலாம்!
இருந்தாலும் ஒரு டீசன்ட் வாட்ச் படமாக மாற்றியிருப்பது துல்கரின் மேஜிக் தான்!
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *