இம்மார்டல்- விமர்சனம்

இம்மார்டல் என்பதற்கு அழியாதது/ சாகாவரம் என்று பொருள்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிவாசி தம்பதியர்க்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை மனிதப்பிறவியே இல்லை என்று தெரிந்த அந்த ஆதிவாசி தகப்பன் குழந்தையை வீசிவிடுகிறார். இப்போது கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. பிரிண்டிங் பிரஸில் வேலை செய்யும் ஜிவி பிரகாஷை பேரழகியான கயாடுலோஹர் ரூம் ஷேரிங் செய்ய அழைக்கிறார். அது ரூம் அல்ல. மாளிகை! அங்கு ஜிவி பிரகாஷுக்கு எல்லாமே கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் ஜிவி பிரகாஷ் கயாடு லோஹர் அமானுஷ்ய பெண் என்பதை அறிகிறார். அதன்பின் அவர் கயாடுலோஹரின் பிடியில் இருந்து தப்பினாரா…கயாடுலோஹர் யார்? என்பது தான் கதை

ஜிவி பிரகாஷ் ஈசியாக ஸ்கோர் செய்யும் கேரக்டரில் நடித்துள்ளார். பேச்சுலர், நாச்சியார், சர்வம் தாளமயம் ஆகிய படங்களைப் போல நடிகராக தனித்து ஸ்கோர் செய்துள்ளார் ஜிவி! கயாடு லோஹரை இந்தப்படம் போல் வேறு எந்தப்படத்திலும் யாரும் இவ்வளவு அழகாக காட்டவில்லை. பேரழகை அள்ளி வந்திருக்கிறார் லோஹர். இப்படியொரு ராட்சசியிடம் மாட்டிக்கொண்டால் தான் என்ன? என்பது போன்ற அவரின் லுக் வேறலெவல். மாறன் ஆதித்யா கதிர் ஒகே மார்க் வாங்குகிறார்கள். கார்த்திக் சீனிவாசன் அட்டகாசமாக நடித்துள்ளார்

சாம்.சி.எஸ் இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. அமானுஷ்யம் நிரம்பிய காட்சிகளை நம் மனதுக்கு நெருக்கமாக தருவது சாம்.சி.எஸின் இசை தான். ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் தனது பங்களிப்பை அட்டகாசமாக செய்துள்ளார். முக்கியமாக கயாடுவை அழகாக காட்டியுள்ள அவரின் கேமரா கண்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா ஹார்ட்டீன்! தமிழ்சினிமாவில் கயாடு லோஹரை இவ்ளோ அழகா காட்டுன மனுசன் இவர் தானுங்க

முதல் இருபது நிமிடம் என்ன கதை இது? லாஜிக்கே இல்லாமல் செல்கிறதே என்று தோன்றியது. ஆனால் 21-ஆவது நிமிடம் Take of ஆகும் படம் அதன்பின் நிற்கவேயில்லை. ஒரு வீட்டிற்குள் நடக்கும் காட்சிகளை பிரில்லியண்டாக கையாண்டுள்ளார் இயக்குநர் மாரியப்பன் சின்னா. பின்பாதி படத்தில் குட்டிக் குட்டி குறைகள் இருந்தாலும் நிச்சயமாக தியேட்டரில் என்சாய் பண்ணலாம்
3.25/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *