4 இடியட்ஸ்- விமர்சனம்

மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்பார் எழுத்தாளர் ஜி நாகராஜன். தனது தேவைக்காக எதையும் செய்யும் மனம் மனிதனுக்கு உண்டு. இந்தப்படத்தின் கதையும் கிட்டத்தட்ட அப்படித்தான்

புகழ் உள்பட அவரின் நண்பர்கள் நான்குபேர் கொரானா கால வறுமையில் இருப்பவர்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள்.ஆனால் அவர்களின் முயற்சி அவர்களை இன்னொரு பெரிய சிக்கலில் கொண்டு மாட்டிவிடுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதே படத்தின் கதை

கதையின் நாயகனாக புகழ் கிடைக்கும் எல்லா வாய்ப்பையும் நன்றாகப் பயன்படுத்தியுள்ளார். சில காட்சிகளில் அவரது நல்ல நடிப்பு கவனம் பெறுகிறது. பிரக்யா நாயன், ரவிமரியா, கும்கி அஸ்வின், வின்செண்ட் அசோகன், இந்திரன் இளங்கோவன், திடியன் திருசெல்வம் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் கொடுத்த வேலைக்கு குறைவைக்கவில்லை

கதைக்கேற்ற இசை படத்திற்கு பெரும்பலமாக மாறியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் தனது பணியை கச்சிதமாகச் செய்துள்ளார்

காமெடியை பிரதானமாக கொண்டு இப்படத்தின் கதையை எழுதியுள்ளார் இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன். திரைக்கதையில் இன்னும் நேர்த்தி கூடி வந்திருக்கலாம். இருந்தாலும் காமெடியோடுச் சேர்த்துச் சொல்லப்படும் கருத்து இந்த 4 இடியட்ஸுக்கு லைக் போட வைக்கிறது
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *