மகுடம்- விமர்சனம்

அப்பாவும் மகனும் என இரண்டு விஷால் வில்லன்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கொத்துப்புரோட்டா போடும் கதை

ஒரு கார் விபத்து ஒன்றில் தன் மனைவி மற்றும் மகளை இழக்கிறார் விஷால். இந்த விபத்திற்கு காரணம் தன் அப்பா விஷால் தான் என உறுதியாக நம்புகிறார் மகன் விஷால். ஆனால் அப்பா விஷால் அல்ல என்ற உண்மை தெரியவந்து, அதன்பின் இரண்டு விஷால்களும் சேர்ந்து வில்லன்களின் விலா எலும்பை உடைக்கிறார்கள். முடிவில் சுபம். (யாருக்குன்னா… யாருக்கோ)

நடிகராக விஷால் ஓரளவு படத்தைத் தாங்கியுள்ளார். ஆக்சன் காட்சிகளில் மட்டும் வழக்கம் போல அனல் பரத்துகிறார். அப்பா விஷால் ஓரளவு என்கேஜிங் செய்கிறார். இளஞ்சிட்டாக பார்த்த அஞ்சலியை ஆன்டியாகப் பார்ப்பதற்கு மனது வலிக்கிறது. துஷாரா விஜயன் ஒகே ரகம். தம்பி ராமையா கத்துற கத்தல்கள் எல்லாம் கொடூரம். வில்லன் பதம் குமார் நடிப்பையே பதம் பார்க்கிறார்

ஜிவி பிரகாஷ் இசையில் சுரத்தில்லை. பாடல்கள் எதோ பரவாயில்லை. ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபி இருவரும் ஒளிப்பதிவில் படத்தைக் கரை சேர்க்க முயற்சித்துள்ளனர். கூடவே ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயனும்

விஷால் கதையை முன்னிலைப்படுத்தி அதற்குள் தன்னை நுழைக்காமல், தன்னை முன்னிலைப்படுத்தி அதற்குள் கதையை நுழைத்துள்ளார். அதனால் படத்தில் எல்லாமே Fake-ஆக இருக்கிறது. சில ஆக்சன் சீக்வென்ஸ் மட்டுமே படத்தை தேற்றுகிறது. கொஞ்சம் பழைய கமர்சியலாக இருந்தாலும் பரவாயில்லை என்பவர்கள் வேண்டுமானால் இந்த மகுடத்தை சூடிக்கொள்ளலாம்
2.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *