DC- விமர்சனம்

ஒரு அதிரடி ஆக்சன் நிறைந்த ஆங்கிலப்படத்தை தமிழ்படமாக கண்முன் நிறுத்தியுள்ளனர்!

ஹீரோ லோகேஷ் கனகராஜ் நான்குபேர் கொண்ட குழுவினரோடு போலீஸாரின் வாகனங்களை குண்டு வீசி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கைப்பற்றுகிறார். லோகேஷ் & கோவிற்கு தலையாக இருப்பவர் தலைவாசல் விஜய். இந்த சம்பவக்காரர்களை போலீஸ் தேடுகிறது. போலீஸிடமிருந்து விலகி தன் டீமோடு சென்னை செல்லும் லோகேஷ் கனகராஜ் அங்கு ஒரு எமோஷ்னல் உறவில் சிக்குகிறார். அதன்பின் அவர் வாழ்வில் நிகழும் மாற்றங்களை ரத்தம் தெறிக்க தெறிக்கச் சொல்லியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

கதாநாயகனாக முதல் படத்திலே முத்தான ஸ்கோர் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். சண்டைக்காட்சிகளில் நல்ல உழைப்பைப் போட்டுள்ளார். சஞ்சனா ஏ.கே வரக்கூடிய எல்லாக் காட்சிகளும் நச் ரகம். வாமிகா கபி பின்பாதி படத்தை பல இடங்களில் லீட் எடுத்துச் செல்கிறார். கிரேட் பெர்பாமன்ஸ். தலைவாசல் விஜய், கிரிஷ் தயால், கஸ்தூரி ராஜா, அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி உள்ளிட்ட எல்லா நடிகர்களும் அசத்தலாக நடித்துள்ளனர். படத்தின் பெரிய பலம் காஸ்டிங் செலக்‌ஷன் எனலாம்

முகேஷ் ஜி ஒளிப்பதிவில் தன் தனித்திறமையைக் காட்டியுள்ளார். தான் இயக்கும் எல்லாப்படங்களிலும் விஷுவலில் அதிகம் மெனக்கெடும் அருண் மாதேஸ்வரன் இப்படத்திலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். அனிருத் என்ற ஒற்றைக் கலைஞன் மொத்தப்படத்தையும் தன் வாத்தியங்களில் தாங்கியுள்ளார். குறிப்பாக ‘ரிகரிகரிக’ என பேக்ரவுண்ட் ஸ்கோர் வரும்போதெல்லாம் தியேட்டர் அதிர்கிறது

படத்தை கதையாக அணுகினால் என்ன கிடைக்கும் என்பதை விடுங்கள். படத்தின் மேக்கிங் நமக்குக் கொடுத்திருப்பது வேறலெவல் விஷுவல் பேரனுபவம். A சான்றிதழ் பெற்றுள்ள படம். அதனால் குழந்தைகள் தவிர்க்கவும். ஜென்ஸி தலைமுறை நிச்சயமாக பலமுறை இந்த டிசி-க்குச் செல்வார்கள். அதற்கான எல்லா முகாந்திரங்களும் படத்திலுள்ளன..
3.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *