பயம் ஒரு மனிதனை மட்டுமல்ல.. ஒரு சமூகத்தையே பாதிக்கும் என்கிறார் ஜனநாயகன்
இந்தப்படம் ஒரு வரலாற்று நிகழ்வாகிவிட்டது. ஒரு சிட்டிங் CM-ன் படம். மேலும் விஜய்யின் கடைசிப்படம். தெலுங்கில் சக்கைப்போடு போட்ட பகவந்த் கேசிரி படத்தின் ரிமேக் தான் ஜனநாயகன் என்றாலும் படத்தின் கதையில் ஹெச்.வினோத் ஒரு சோசியல் செய்தியை வைத்துள்ளார். மமிதா பைஜுக்கு தன் தாயின் கொலையைப் பார்த்ததிலிருந்து சின்ன சவுண்ட் வந்தாலும் பயம். அவரை வளர்த்து வரும் முன்னாள் காவல்துறை அதிகாரி விஜய் மமிதாவை மிலிட்டிரியாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அந்த ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் இருக்கும் போதுதான் நாட்டுக்கே பேராபத்தை விளைவிக்க பாபி தியோல் ஒரு திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டத்தை ஜனநாயகன் எப்படி முறியடிக்கிறார் என்பதே படத்தின் கதை
ஒன்லாஸ்ட் டைம் என்பதாலோ என்னவோ தான் தோன்றும் எல்லாக் காட்சிகளிலும் ப்ளாஸ்ட் செய்திருக்கிறார் விஜய். டான்ஸ், பைட், எமோஷ்னல் என எல்லா ஏரியாவிலும் அண்ணன் வழக்கம் போல் கில்லி தான். பாபி தியோல் வில்லனாக மிரட்ட, மமிதா பைஜு பிரமாதப்படுத்தியுள்ளார். பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கெளதம் மேனென் உள்ளிட்ட இன்னபிற நடிகர்கள் நிறைய. அவற்றில் தோழர் ரேச்சல் கவனிக்க வைக்கிறார்
சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தைப் பதிவு செய்திருக்கிறது. CG வேலைப்பாடு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். அனிருத் ‘தளபதிக்கு இது ஒன்லாஸ்ட் டைம்’ என்பதால் பின்னிவிட்டார். பாடல்களில் தீ தெறிக்கிறது.
திரைக்கதையில் அழுத்தமான முன்பாதியை கொடுத்த இயக்குநர் பின்பாதியில் பெரிய திருப்தியைத் தரவில்லை. “எதோ பெரிய விசயம் நடக்குது. எப்படியோ நமக்கு தளபதி ஜெய்ச்சா போதும்” என ரசிகர்கள்.. சாரி.. பொதுஜனம் பின்பாதியில் தேமே என அமர்ந்திருக்கும் நிலை. கடைசியில் விஜய் நடித்த பல காட்சிகள் நடனங்களை கட் செய்து அவரின் திரையுலக வாழ்விற்கு ஒரு ட்ரிப்யூட் செய்திருந்தார்கள். அது சின்னதாக கண் கலங்க வைக்கிறது
குறைகள் இருப்பினும் 30 ஆண்டுகாலம் தமிழ்சினிமாவை கட்டியாண்ட நம்ம விஜயை லாஸ்ட் ஒன்டைம் என சமரசம் செய்து படத்தை தியேட்டரில் பார்த்துவிடுங்கள்.. வீட்டில் பார்த்திருந்தாலும்
3/5
-வெண்பா தமிழ்

