இரண்டாம் ஆட்டம் எப்படி லிங்கம் வெப்சீரிஸ் ஆனது? – லக்ஷ்மி சரவணக்குமார்

ஜுனியர் விகடன் இதழில் தொடராக வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்த தொடர்கதை தற்போது லிங்கம் எனும் வெப்சீரிஸாக வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக சமீபத்தில் ஒரு பிரஸ்மீட் நடைபெற்றது. அதில் லிங்கம் வெப்சீரிஸின் இயக்குநர்,

“லக்ஷ்மி சரவணக்குமார் பேசுகையில், “இந்த ஐந்தரை வருட நீண்ட பயணம் எனக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சோர்வையும் எதிர்பார்ப்பையும் கொடுத்தது.

சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு எழுத்தாளரான எனக்கு இயக்குநர் வசந்தபாலனிடம் பணியாற்றிய அனுபவமே, இயக்குநராக வேண்டும் என்கிற உந்துதல் அளித்தது. நான் எழுதிய 85 கதைகளில் பல முக்கியக் கதைகள் விகடனில்தான் வந்தன.

‘இரண்டாம் ஆட்டம்’ தொடரின் 40 அல்லது 50-வது எபிசோடின் போது இந்த சீரிஸிற்கான கதவு திறந்தது. விகடன் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன் சார், ராதிகா மேடம், ராதா மேடம், செல்வா சார் ஆகியோருக்குத் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *