சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு இரண்டாவது முறையாக ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் பிரஜனுக்கு இந்த அந்தரன் கை கொடுக்குமா?
நாயகி இவானா வருணை திருமணம் செய்யவிருக்கும் சில இளைஞர்கள் வரிசையாக கொல்லப்படுகிறார்கள். கொலைகளைச் செய்தவர் யார் என கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியான நாயகன் பிரஜன் வருகிறார். அவரது விசாரணையில் பல அதிர்ச்சிகள் அவருக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் நமக்குமே ஏற்படுகிறது. இந்த இன்வெஸ்டிகேசனின் என்ட் என்ன என்பதே மீதிக்கதை
நாயகனாக பிரஜன் ரொம்பவே மெச்சூட் ஆக நடித்துள்ளார். அவரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பெரும்பலம். அறிமுக நாயகி இவானா வருண் இன்னுமே நல்ல நடிப்பை வழங்கியிருக்கலாம். க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஓரளவு தேறியுள்ளார். அனுபமா குமார், செந்தில்குமாரி, ஐஸ்வர்யா கண்ணன், ஆதிரன், தண்டபாணி என ஏனைய கேரக்டர்களும் ஒகேவாக நடித்துள்ளனர்
இசையமைப்பாளர் ஹரி ஆர்.எஸ் பின்னணி இசையில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். பாடல்களும் பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன் மினிமலான பட்ஜெட்டிலும் குவாலிட்டியான விஷுவலை கொடுத்துள்ளார்
படத்தில் ஒரு புதுமையான விசயத்தை முயற்சித்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் ராகவன். படத்தை எங்குமே தொய்வடைய விடாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். இன்னும் சில எமோஷ்னல் பேக்கேஜைச் சேர்த்திருக்கலாம். கொலைகாரன் யார் என்று தெரியவரும் போது நிச்சயமாக ஷாக் ஏற்படுகிறது
படம் Sure ah ஒரு டீசன் ட் வாட்ச்
3/5
-வெண்பா தமிழ்

