இந்திய சினிமாவில் பைக்ரேஸ் பற்றி வந்திருக்கும் முக்கிய சினிமா இந்த பைக்கர்
(கதை 2003-ல் நடக்கிறது. ப்ளாஸ்பேக் 1994-ல் நடக்கிறது.) பெரும் பைக்ரேஸ் சாம்பியனான ராஜசேகர் தன் மகன் சர்வானந்திடம் இருக்கும் ரேஸ் திறமையை கண்டெடுத்து வளர்த்தெடுக்கிறார். வேறு எதிலும் கவனம் செல்ல விடாமல் அவரை கண்டிப்புடன் வளர்க்கிறார் ராஜசேகர். ஆனால் சர்வானந்த் திறமையான ரேஸராக இருந்தாலும் ஒருபுறம் மாளவிகா நாயரோடு காதலும் கொள்கிறார். முக்கியமான பைக்ரேஸ் வெளிநாட்டில் நடக்கும் போது ராஜசேகருக்கு தெரியாமல் சர்வானந்த் தன் காதல் மனைவிக்காக வந்துவிடுகிறார். மேலும் சர்வானந்த் திருமணம் முடித்ததும் ராஜசேகருக்குத் தெரியாது. இடி விழுந்தாற்போல் நொறுங்கி விடுகிறார் ராஜசேகர். சர்வானந்த் அதன்பின் வேறு தொழிலில் கவனம் செலுத்துகிறார். ஒரு கட்டத்தில் தன் தந்தையின் அன்பைப் பெறவும், தந்தையின் கனவை நிறைவேற்றவும் மீண்டும் ரேஸராக களம் காண்கிறார் சர்வானந்த். களத்தில் எப்படி அவர் வெல்கிறார் என்பதே மீதிக்கதை
பைக் ரேஸர் ரோலுக்காக தன் உடல் எடையை 17 கிலோ குறைத்துள்ளார் சர்வானந்த். அவரின் பேருழைப்பு படத்தில் பக்காவாக தெரிகிறது. எமோஷ்னல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார் சர்வானந்த். ராஜசேகர் மற்றொரு ஹீரோவே தான். பேரன் வருகைக்குப் பிறகு அவர் காட்டும் ரியாக்சன்ஸ் க்யூட். மாளவிகா நாயர் கவர்ச்சி நடிப்பு இரண்டிலுமே அதகளம் செய்துள்ளார்
ஒளிப்பதிவாளர் பைக்ரேஸ் காட்சிகளை ஹாலிவுட் தரத்தில் படம்பிடித்துள்ளார். கிரேட்! ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ரேஸ் காட்சிகளில் அதிரும் இசை அபாரம். சவுண்ட் எபெக்ட் டீமும் நன்றாக உழைத்துள்ளனர்
நல்ல மோட்டிவேட் டைப் படமாகத்தான் இப்படத்தை இயக்கியுள்ளார் அபிலாஷ் ரெட்டி. அப்பா மகன் செண்டிமெண்ட், கணவன் மனைவி செண்டிமெண்ட் என பல ஏரியாக்கள் படத்தில் வொர்க் ஆகியுள்ளது. ரேஸ் போட்டி பற்றிய அனுபவமும் புரிதலும் போதியளவில் நமக்கு இல்லாததால் பெரும் உணர்வெழுச்சி நமக்கு ஏற்படவில்லை. படத்தின் நீளத்தையும் சுருக்கியிருக்கலாம்
மொத்தப்படமும் கமர்சியல் அம்சத்துடன் இருப்பது ஆறுதல். மேக்கிங் லவ்வர்ஸுக்கு இந்த பைக்கர் Full மீல்ஸ் கொடுக்கும்
3/5
-வெண்பா தமிழ்

