கஞ்சா வியாபாரிக்கு த.வெ.க. வில் சீட்

தமிழக வெற்றிக் கழகத்தின் பேராவூரணி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் காண்டியப்பன் என்கிற சந்திர காண்டீபன். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த ஆண்டு 13 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டவர் பத்து நாட்களுக்கு முன்பு தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தார்.

ஜாமீனில் வந்தவுடன் தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, மாவட்ட செயலாளர் மதன் மூலம் மேல்மட்ட ஆட்களைப் பிடித்து த.வெ.க.வில் சீட் பெற்றுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத தொகுதி நிர்வாகிகளும், பொது மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *