கடந்த இருநாட்களாக இணையமெங்கும் அவதார் படம் பற்றிய விமர்சனங்களை நம் மக்கள் எழுதித் தள்ளிவிட்டமையால், நாம் அப்படம் அந்தப் அனுபவத்தை மட்டுமே பார்க்கலாம்
ஒரு திரைப்படம் என்பது ஒன்று உணர்ச்சி மிகுந்த கதையால் நம்மை விம்ம வைக்க வேண்டும். இல்லை உயர்ச்சி நிரம்பிர மேக்கிங்கால் நம்மை வியக்க வைக்க வேண்டும். அதில் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் நம்மை வியக்க வைத்துள்ளது. இப்படத்தின் முதல் வெற்றியாக இதைப் பார்க்கலாம்
ரசல் கார்ப்பென்ட்டரின் ஒளிப்பதிவு பெரிய பெரிய சாகசங்களை நிகழ்த்தி கண்களுக்கு பெரு விருந்து அளித்துள்ளது. காடுகள் அடங்கிய பூமி, கடல், நெருப்பு மலை என வெவ்வேறு நிலப்பரபபை அற்புதமான கலைப் படைப்பாக்கியுள்ளனர் கேமராமேன். ஜேம்ஸ் கேமரூன் எண்ணங்களை அப்படியே வண்ணங்களாக்கி கொடுத்துள்ளார் ரசல் கார்ப்பன்ட்டர். எடிட்டர் டீம் மட்டும் படத்தின் நீளம் குறித்து ஆழமான டிஸ்கசன் செய்திருக்கலாம். கதையில் வலு பிடித்த இயக்குநர் திரைக்கதையில் சற்று வலுவிழந்து நிற்பது நிஜமே! அதற்காக இப்படியொரு பிரம்மாண்ட மேக்கிங்கையும், ஜாக் சாம்பியனின் நையாண்டி, ஜாக்சாலியின் அதி தீவிரம் போன்ற பாசிட்டிவ் அம்சங்களையும் ரசிக்காமல் இருக்க முடியுமா? முடியாது தானே!!
So don’t miss it
-3/5
-வெண்பா தமிழ்

