நிர்வாகம் பொறுப்பல்ல- விமர்சனம்

“ஒருத்தங்களை ஏமாத்தணும்னா அவங்க ஆசையை தூண்டணும்” என்ற சதுரங்கவேட்டை படத்தின் புகழ்பெற்ற வசனம் தான் படத்தின் ஒன்லைன்

ஹீரோ கார்த்திஸ்வரன், ஆதவன் உள்ளிட்ட தன் நால்வர் அணியோடு மக்களை ஏமாற்றி கொள்ளை அடித்து வருகிறார். எப்படியான ஏமாற்றுன்னா… வீடியோ காலில் நிர்வாணத்தை சேகரித்து பணம் புடுங்குவது, பின் பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம் என்று சொல்லி வங்கி ஆரம்பித்து மோசடி செய்வது என அவரின் க்ரைம் லிஸ்ட் பெரியது. ஆனாலும் அதற்கு ஒரு நியாயம் வைத்துள்ளார். இந்த அட்ராசிட்டியின் என்ட் என்ன என்பது தான் படம்

ஹீரோ கார்த்திஸ்வரன் தான் படத்தின் இயக்குநர் தன் கேரக்டருக்கு பில்டப்-ஐ ஏத்தி ஏத்தி எழுதியுள்ளார். ஆனால் அதற்கேற்ற நடிப்பையும் கொடுக்கணுமில்லியா? ஆங்காங்கே லைட்டா சறுக்கிவிடுகிறார். லிவிங்ஸ்டன் ஒரு செண்டிமெண்ட் காட்சியில் மட்டும் பயன்பட்டுள்ளார். ஆதவன் இரண்டு துண்டு காமெடி செய்கிறார். ப்ளாக் பாண்டி ஒரு துண்டு காமெடியோடு End-ஆக, அகல்யா உள்ளிட்ட யாவரும் ஒகேவாக நடித்துள்ளனர்

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் எல்லாம் ஜஸ்ட் லைக்! பேக்ரவுண்ட் மியூசிக் ஆல்சோ ஜஸ்ட்லைக்! ஒளிப்பதிவாளர் இயக்குநரின் நெருங்கிய நண்பர் போல. பல பில்டப் ஷாட்களை எடுத்துத் தள்ளியுள்ளார். குளுமனாலி பாடலில் மட்டும் கேமரா சுற்றிச் சுழன்றுள்ளது

பிறரை ஏமாற்றி கொள்ளையடிக்கும் ஹீரோ.. முடிவில் மாட்டிக்கொண்டு தன் தரப்பை விளக்கும் வழக்கமான கதை. ஆனால் இதை அட்டகாசமான திரைக்கதை பண்ணியிருக்க முடியும். இயக்குநர் அந்த நல் வாய்ப்பை தவற விட்டுவிட்டார். தனக்கு பாட்டு வேண்டும், பைட் வேண்டும், பில்டப் வேண்டும் என யோசித்த இயக்குநர், படம் ஜெயிக்க நல்ல திரைக்கதை வேண்டும் என்பதை மறந்துவிட்டார். இருந்தாலும் ஒருசில மெச்சூட் ஆன காட்சிகள் அற்புதம்! பலப்பல குறைகள் நம்மை எட்டி எட்டிப் பார்த்தாலும் நாட்டில் இன்று நடக்கும் பல்வேறு முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதில் இந்த நிர்வாகம் ஜெயித்துள்ளது.

தலைப்பு வேண்டுமானால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதாக இருக்கலாம். ஆனால் படம் நல்லாருக்கும் என நம்பும் ரசிகர்களுக்கு படக்குழு சற்று பொறுப்பேற்றுள்ளது. அந்த வகையிலும் இந்த படக்குழுவைப் பாராட்டலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *