‘எவர்க்கும் அஞ்சோம்’ என்பது பழந்தமிழிலுள்ள வீர வார்த்தை. நடிகர்களில் அது சூர்யாவிற்கும், இயக்குநர்களில் லிங்குசாமிக்கும் மிகவும் பொருந்தும்! 2014-ஆம் ஆண்டு அஞ்சான் வெளிவந்த சமயத்தில் அப்படத்தை, சோசியல் மீடியாவில் புரட்டி எடுத்து விரட்டி அடித்தார்கள். சிலர், “படம் நல்லாதானே இருக்கு.. ஏன் இப்படி ஓட்றாங்க?” என்று கேள்வி எழுப்பினர். ஆனால் எந்த விமர்சனங்களுக்கும் அஞ்சவில்லை இயக்குநரும் ஹீரோவும். இதோ அஞ்சாத தீரத்தோடு ரீ எடிட் செய்து படத்தை இப்போது வெளியிட்டுள்ளார் இயக்குநர் லிங்குசாமி
மும்பையில் ஈகோவால் கொல்லப்பட்ட தன் அண்ணனுக்காக பழிக்குப் பழி வலிக்கு வலி என்ற முடிவில் சூர்யா வந்திறங்குவார். அதன்பின் நடக்கும் அதிரடி ஆக்சன் மேளா தான் படம். படத்தின் கதை. மொத்தக் கதை அனைவருக்கும் தெரியும் என்பதாலே சுருக்கமாகச் சொல்லியுள்ளோம்.
தமிழ்சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவரான சூர்யா இப்படத்திற்காக சண்டைக்காட்சிகளில் நிறைய ரிஸ்க் எடுத்துள்ளார். அது இப்போதும் ஸ்கிரீனில் பார்க்க ஆச்சர்யம் தருகிறது. சமந்தாவிற்கும் அவருக்குமான காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி பின்னுகிறது. நிச்சயமாக இன்றைய ஜென்ஸி கிட்ஸ் தியேட்டரிலே ஹார்ட்டீன் விடுவார்கள். இதர நடிகர்களின் க்ளாஸான பங்களிப்பும் படத்தை கூடுதல் மாஸ் ஆக்கியுள்ளது.
ஒவ்வொரு ஷாட்களும் ஸ்கிரீன் ஷாட்ஸ் மெட்டிரியல்ஸ் எனும் வகையில் சந்தோஷ்சிவன் கேமராவில் வித்தை காட்டியிருக்கிறார். 11 ஆண்டுகள் கழித்தும் இளமையோடு இருக்கிறது விஷுவல்ஸ்! ரத்தம் நாளங்களை சுண்டிவிடும் யுவனின் பின்னணி இசையை இப்போதும் கொண்டாட முடிகிறது.
36 நிமிடங்களை எடிட் செய்து பக்கா கமர்சியல் பேக்கேஜ்-ஆக கொடுத்துள்ளார் இயக்குநர் லிங்குசாமி. நிச்சயமாக இந்த அஞ்சான் எகிறி அடித்துள்ளான். Dear ஜென்ஸி கிட்ஸ். Don’t miss it
4/5
-வெண்பா தமிழ்

