மெஜேன்ஸர்- விமர்சனம்

முகநூல் வழியில் ஒரு அமானுஷ்ய காதல்

காதல் தோல்வியால் தற்கொலைக்குத் தயாராகிறார் ஹீரோ ஸ்ரீராம். அப்போது ஆனந்தி என்ற பெயரில் அவருக்கு ஒரு மெசேஜ் வருகிறது. பேஸ்புக்கில் அந்த மெசேஜைப் பார்க்கும் ஸ்ரீராம் ஆனந்தியை யார் என விசாரிக்கிறார். ஆனந்தி தான் ஆல்ரெடி இறந்துவிட்டதாகச் சொல்கிறார். யார் அந்த ஆனந்தி? இறந்த ஆனந்தி எப்படி மெசேஜ் அனுப்புகிறார். ஸ்ரீராம் இதற்கான வேர்களைத் தேடும் பயணமே இந்த மெஜேன்ஸர்

கதையின் நாயகனாக ஸ்ரீராம் நயமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷ்னல் காட்சிகளில் மட்டும் இன்னும் பயிற்சி வேண்டும். ஆனந்தியாக வரும் நாயகி பாத்திமா நேஹும் எளிமையான தோற்றம் மற்றும் நடிப்பால் மனதில் பதிகிறார். மற்றொரு நாயகி மனிஷா ஸ்ரீ இரண்டாம் பாதியில் தரமான பங்களிப்பைச் செய்துள்ளார். இன்ஸ்பெக்டராக வரும் லிவிங்ஸ்டன் கொடுத்த வேலையைச் செய்துள்ளார். கூல் சுரேஷ் சின்னதாக அட்டனென்ஸ் மட்டும் போடுகிறார்.

ட்ரோன் ஷாட்கள் மூலம் ஆனந்தியின் கிராமத்தை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் பால கணேசன் R. இசை அமைப்பாளர் அபுபக்கர் M பாடல்களில் காதலின் அழுத்தத்தை கொண்டுவர முயற்சித்துள்ளார். எடிட்டர் பிரசாந்த் R இன்னுமே ஷார்ப் காட்டியிருக்கலாம்

இறந்த பெண்ணோடு காதல் என்பது எதார்த்தத்திற்கு ஒத்துவராது என்றாலும், இதிலொரு பேண்டஸி எமோஷ்னலை வைக்க முயற்சித்துள்ளார் இயக்குநர். ரைட்டிங் மேக்கிங் இரண்டிலுமே நிறைய குளறுபடிகள். அவற்றைச் சீர் செய்து செப்பனிட்டிருந்தால் நல்ல காட்சியனுபவம் கிடைத்திருக்கும்.

கதையை ஆன்லைனில் வைத்த இயக்குநர் ரமேஷ் இலங்காமணி திரைக்கதையை ஆப்லைனில் வைத்துவிட்டார்.
இருப்பினும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் யாருமே எதிர்பார்க்காத ஒன்று. So ஒன்றுக்காகவே படத்தைத் தட்டிக்கொடுக்கலாம்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *