பரணி ஸ்டுடியோவில் பாலாவின் எமோஷ்னல்!

இந்தத் தமிழ்சினிமா எத்தனையோ நடிகர்களை கண்டுள்ளது. சிலருக்கு மட்டும் தான் மக்கள் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தச் சிலரில் ஒருவராக இருக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் பாலா.

தற்போது பாலா இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற செப். 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் படத்தின் பிரஸ்மீட் சென்னை பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. விழாவில் படக்குழு மொத்தமும் கலந்துகொண்டது.
படத்தின் ஹீரோ பாலா பேசும்போது மிகவும் எமோஷ்னலாக இருந்தார். ஹீரோவாக அவர் நடிக்க முடிவெடுத்த பின் அவருக்கு ஏற்பட்ட அவமானங்களை சுட்டிக்காட்டிய அவர், தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பலரையும் நினைவு கூர்ந்தார். இப்படத்தில் பாலாவுடன் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *