தேர்தல் பணம் கைமாறுவதும், காவல் நிலையத்தில் துப்பாக்கி மிஸ் ஆவதும் ஒரே நேரத்தில் நடக்கிறது. அதன்பின்னணி என்ன என்பதே இந்தச் சரண்டர்
ஹீரோ தர்ஷன் ட்ரைனிங் எஸ்.ஐ ஆக இருக்கிறார். அதே ஸ்டேசனில் லால் கன்ட்ரோலில் இருக்கும் துப்பாக்கி ஒன்று மிஸ் ஆகிறது. அந்தத் துப்பாக்கி நடிகர் மன்சூர் அலிகானுடையது. படத்தில் அவர் நடிகராகவே வருகிறார். தேர்தல் நேரத்தில் கையில் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வைத்திருக்க கூடாது என்பதால் எலெக்சன் வரைக்கும் ஸ்டேசனில் துப்பாக்கியைச் சரண்டர் செய்கிறார் மன்சூர். மேலும் பிரபல ரவுடியிடம் அரசியல் வாதிகள் தேர்தல் பணத்தைக் கொடுத்து பட்டுவாடா பண்ணச் சொல்கிறார்கள். அந்தப்பணமும் மிஸ் ஆகிறது? இதன் பின்னணி என்ன என்பதே கதை
ஹீரோ தர்ஷன் இப்படத்தில் ஒரு மெச்சூட் நடிப்பைக் கொடுத்துள்ளார். நடிகர் லால் ஒரு நேர்மையான ஏட்டைய்யாவை நம் கண்முன் நிறுத்துகிறார். சாதாரண காட்சிகளை கூட லால் தன் நடிப்பால் தூக்கி நிறுத்துகிறார். படத்தில் நடிகராகவே தோன்றும் மன்சூர் அலிகான் முதல் மற்ற கேரக்டர்களில் வரும் அனைவருமே சரியான மீட்டரில் நடித்துள்ளனர்
இசை தேவைக்கு அதிகமாக ஒலிக்கவில்லை. அதுவே பெரிய ஆறுதல். ஒளிப்பதிவாளர் ஓரளவு நல்ல விஷுவலையே கொடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக போஸ்ட் புரொடக்சன் வேலையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்
மிதமாக துவங்கும் படம் 45 நிமிடங்களுக்குப் பின் பரபரப்பாக போகிறது. இரண்டு சம்பவங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடுத்தடுத்து வந்து நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. முன்பாதியில் இருக்கும் இந்த நேர்த்திக்கு சற்றும் குறையாமல் பின்பாதியிலும் படம் நேர்த்தியாக இருந்தது. முனிஷ்காந்த் போர்ஷனை சற்றுக் குறைத்திருக்கலாம். நடிகர்களின் தேர்வு, தொய்வில்லாத திரைக்கதை என ரசிகர்கள் இந்தச் சரண்டரிடம் சரணடைய நிறைய காரணங்கள் இருக்கின்றன
3.25/5
-வெண்பா தமிழ்

