உசுரே- விமர்சனம்

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட காதல் கதை

நடிகை மந்த்ரா தன் மகள் ஜனனியை எந்த ஆணையும் பார்க்கக் கூட விடாமல் பாதுகாத்து வளர்க்கிறார். யாராவது ஜனனியை சும்மா பார்த்தால் கூட அவர்களை அடித்துத் துரத்துவார் மந்த்ரா. இச்சூழலில் ஹீரோ DJ அருணாசலம் ஜனனி மீது காதல் கொள்கிறார். ஒரு சூழலைப் பயன்படுத்தி DJ தன் காதலைத் தெரிவிக்கிறார். ஜனனியின் ரியாக்சன் வருமுன்பே மந்த்ரா DJ-ஐ செருப்பால் அடித்து விடுகிறார். சூழல் மிகவும் கடினமாக மாற, அதன்பின் DJ-யின் காதல் என்ன ஆனது என்பதே படத்தின் கதை

கதையின் நாயகன் DJ. அசுரன் படத்தில் தனுஷின் மூத்த மகனாக கலக்கியவர். இப்படத்தில் ஒரு ஹீரோவாக நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். நாயகி ஜனனி அமைதியாக நடித்து ஈர்க்கிறார். கிரேன் மனோகர் தந்தை கதாப்பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். விஜயுடன் நிலாவே வா படத்தில் நடித்த மந்த்ரா இப்படத்தில் வில்லி போல நடித்து ஆச்சர்யம் காட்டியுள்ளார். ஆதித்யா கதிர் தனது வழக்கமான பன்ச் வசனங்களால் கவர்கிறார்

காதல் படம் என்பதால் இசை படத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே காதல் உணர்வைத் தருகிறது. ஆந்திராவின் சித்தூர் தான் கதைக்களம். சித்தூரின் மலையழகை மொத்தமாக தன் கேமராவிற்குள் கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர்

படத்தின் கதை நம்மோடு கனெக்ட் ஆகும் ஒன்றாக இருப்பது பெரிய ப்ளஸ். நிச்சயமாக நம் வாழ்விலோ அல்லது நமக்குத் தெரிந்தவர்களின் வாழ்விலோ இப்படியொரு காதல் சூழல் அமைந்திருக்கும். ஆனால் இதை ஒரு நல்ல திரைக்கதையாக்கத் தவறியுள்ளார் இயக்குநர். ஆழமான உணர்வெழுச்சியைத் தரும் காட்சிகளை எழுதியிருக்கலாம். மேக்கிங்கிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சின்னச் சின்ன குறைகளைச் சரி செய்திருந்தால் உசுரே ஜீவனுள்ள படமாக மாறியிருக்கும்
2.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *