நல்லதுக்காக திருடும் எம்.ஜி.ஆர் காலத்து ஹீரோ பேரரசனிடம் மோதுவதே இந்த ஹரிஹர வீரமல்லு
நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை என்பது போல திருடி திருடி நல்லது செய்கிறார் ஹீரோ பவன் கல்யாண். ஒருமுறை டெல்லி பேரரசன் அவுரங்சீப் வசமிருக்கும் கோகினூர் வைரத்தை திருடும் அசைன்மெண்ட் அவருக்கு வருகிறது. அதுவரை சாதா திருடனாக இருந்த பவன் கல்யாண் எப்படி ஸ்பெசல் சாதாவாக மாறினார் என்பதே கதை
படத்தின் ஒன்மேன் ஆர்மியாக பவன் கல்யாண். இஷ்டத்திற்கு தன் இந்துத்துவ அரசியலைப் பேசுகிறார். இஷ்டம் போல் அங்குமிங்கும் பறக்கிறார். நூறு பேர்களைப் போட்டுப் பொளக்கிறார். ஆத்தீ! நிதி அகர்வால் கேரக்டரில் வரும் ட்விஸ்ட் சிறப்பு. சத்யராஜ் இந்து மதத்தைக் காப்பாற்ற வந்த குருவாக நடித்துள்ளார். அவுரங்கசீப் ஆக வரும் இந்தி ஆக்டரும் ஒகே
மகேஷ் ப்ரமஹம்சாவின் ஒளிப்பதிவு உலகத்தரம். சில காட்சிகளில் வாவ் சொல்ல வைக்கிறார். கீரவாணியின் இசையில் பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே பட்டாசு
அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தில் இந்துக்களுக்கு நிறைய கொடுமைகள் நடந்தது உண்மை தான். அதை மையமாக வைத்துத்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ஜோதி கிருஷ்ணா. ஆனால் அது ஒரு கட்டத்திற்குப் பின் ஓவர் டோஸ் ஆகிவிட்டது. அதனாலே வீரமல்லு நம்மை தூர நில்லு என்கிறார்
2.5/5
-வெண்பா தமிழ்

